சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

உ.பி.: துர்கா பூஜையில் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு, 62 பேர் காயம்!

உத்தரப் பிரதேச மாநிலம் பதோஹியில் அக்.2ல் நடந்த துர்கா பூஜையில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. 

News image
Updated On :3 அக்டோபர் 2022, 9:27 am

DIN

உத்தரப் பிரதேச மாநிலம் பதோஹியில் அக்.2ல் நடந்த துர்கா பூஜையில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. 

பதோஹி மாவட்டத்தின் அவுராய் நகரில் உள்ள துர்கா பூஜை பந்தலில் ஞாயிற்றுக்கிழமை இரவு ஏற்பட்ட தீ விபத்து ஏற்பட்டது. இதில் 5 பேர் உயிரிழந்தனர். 

உயிரிழந்தவர்கள் அங்குஷ் சோனி (12), ஜெய தேவி (45), நவீன் (10), ஆர்த்தி சௌபே (48) மற்றும் ஹர்ஷ்வர்தன் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தில் மொத்தம் 67 பேர் படுகாயமடைந்த நிலையில் மூவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பதோஹி மாவட்ட மாஜிஸ்திரேட் கௌரங் ரதி கூறுகையில், 

தீ விபத்துக்கு குறைந்த மின்னழத்தம் காரணம் என்று முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. அவுரை காவல் நிலையம் அருகே உள்ள பந்தலில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

இந்த துர்கா பந்தல் விழாவுக்கு சுமார் 150 பேர் வந்திருந்தனர். அதில் 30-க்கும் மேற்பட்டோர் தீக்காயங்களுக்கு ஆளாகினர். தீக்காயம் ஏற்பட்டவர்கள் கோபிகஞ்ச் மற்றும் ஆனந்த் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். 

இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.