புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

புல்வாமாவில் நடந்த சம்பவம்: தவறுதலாக வெடித்த துப்பாக்கி; ஒருவர் பலி

ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் காவல்துறை அதிகாரி கையில் இருந்த துப்பாக்கி, எதிர்பாராதவிதமாக சுட்டதில் பொதுமக்களில் ஒருவர் பலியானார்.

News image

புல்வாமாவில் நடந்த சம்பவம்: தவறுதலாக வெடித்த துப்பாக்கி; ஒருவர் பலி

Updated On :5 அக்டோபர் 2022, 9:37 am

PTI

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் காவல்துறை அதிகாரி கையில் இருந்த துப்பாக்கி, எதிர்பாராதவிதமாக சுட்டதில் பொதுமக்களில் ஒருவர் பலியானார்.

ஆசிஃப் அகமது பட்ரூ என்ற 25 வயது இளைஞர், துப்பாக்கிக் குண்டு பாய்ந்து மரணமடைந்தார். புல்வாமா மாவட்டம் ஹால் பகுதியில், காவலரின் பாதுகாப்புத் துப்பாக்கி எதிர்பாராதவிதமாக வெடித்ததில் இந்த சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது.

துப்பாக்கிக் குண்டு பாய்ந்ததும் உடனடியாக பட்ரூ மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும், ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி பலியானதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.