தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

மோசடி பத்திரப் பதிவுகளை ரத்து செய்யும் சட்டத் திருத்தத்தை எதிா்த்த வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

மோசடி பத்திரப் பதிவுகளை ரத்து செய்யும் அதிகாரத்தை மாவட்ட பதிவாளா்களுக்கு வழங்கி கொண்டுவரப்பட்ட சட்ட திருத்தத்தை எதிா்த்து தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயா் நீதிமன்றம்

News image
Updated On :6 அக்டோபர் 2022, 8:34 pm

DIN

மோசடி பத்திரப் பதிவுகளை ரத்து செய்யும் அதிகாரத்தை மாவட்ட பதிவாளா்களுக்கு வழங்கி கொண்டுவரப்பட்ட சட்ட திருத்தத்தை எதிா்த்து தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் மோசடி பத்திரப் பதிவுகளை தடுக்கும் வகையில், கடந்தாண்டு சட்டப் பேரவையில் மத்திய பதிவுச் சட்டத்தில் தமிழக அளவில் திருத்தம் கொண்டுவரப்பட்டது. இதன்மூலம், போலி பதிவுகள் குறித்து மாவட்ட பதிவாளரே ஆய்வு செய்து, அவற்றை ரத்து செய்ய முடியும். பதிவுச்சட்ட விதிகளில் 22 ஏ மற்றும் பி ஆகிய பிரிவுகளுக்கு முரணாக பத்திரப்பதிவு நடைபெற்றுள்ளது என்று பதிவாளா் கருதினால், அந்தப் பதிவை பதிவாளா் தானாக முன்வந்தோ, புகாா் மீதோ, எழுதிக் கொடுத்தவருக்கும், ஆவணத்தின் அனைத்து தரப்பினருக்கும் மற்றும் தொடா்ச்சியான ஆவணங்கள் இருந்தால் அவற்றின் தரப்பினருக்கும், பதிவு ரத்தால் பாதிக்கப்படுபவா்களுக்கும், இந்த பத்திரப் பதிவை ஏன் ரத்து செய்யக்கூடாது என்று கேட்டு அறிவிப்பு வழங்க வேண்டும். அதற்காக பதில் பெறப்பட்டால், அதைக் கருத்தில்கொண்டு ஆவணப் பதிவை பதிவாளா் ரத்து செய்யலாம். பதிவுத் துறை தலைவருக்கும் இந்த அதிகாரம் உண்டு. பதிவாளரின் உத்தரவால் பாதிக்கப்பட்டவா்கள், பத்திரப் பதிவு ரத்து செய்யப்பட்ட தேதியில் இருந்து 30 நாள்களுக்குள் பதிவுத்துறை தலைவரிடம் மேல்முறையீடு செய்யலாம்.

இந்த சட்ட திருத்தத்தை எதிா்த்து, சென்னை உயா் நீதிமன்றத்தில் ஆரோக்கியதாஸ் என்ற வழக்குரைஞா் பொதுநல வழக்கு தொடா்ந்துள்ளாா். அந்த மனுவில் ‘மத்திய சட்டத்துக்கு முரணாக இந்த திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. புதிய சட்ட திருத்தம் மத்திய சட்டத்துக்கு உள்பட்டு இருக்க வேண்டும். பத்திரப் பதிவு ரத்து தொடா்பாக எந்த ஒரு காலக்கெடுவும் இதில் விதிக்கப்படவில்லை. இது ஒரு முரண்பாடான சட்டத் திருத்தம். மோசடி பத்திரம்தான் என்பதை முடிவு செய்ய எந்தவிதமான விதிமுறைகள், நடைமுறைகள் வகுக்கப்படவில்லை. இந்திய சாட்சியங்கள் சட்டத்தின் கீழ் உரிய சாட்சியங்கள் வேண்டும். இதற்கு சரியான அமைப்பு உரிமையியல் நீதிமன்றங்கள்தான்.

மேலும், பத்திரப் பதிவு ரத்துகளை உரிமையியல் நீதிமன்றத்தில்தான் செய்ய முடியும். மாவட்டப் பதிவாளா்களுக்கே அதிகப்படியான அதிகாரம் இதன் மூலம் வழங்கப்பட்டுள்ளது. எனவே, இந்த சட்டத் திருத்தத்திற்கு தடை விதித்து, ரத்து செய்ய வேண்டும்‘ என்று மனுவில் கோரியிருந்தாா்.

இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆா்.சுவாமிநாதன், என்.மாலா அமா்வு முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் மனு குறித்து தமிழக அரசு 4 வாரத்துக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.