காங்கிரஸ் கட்சியினரிடம் கேளுங்கள் ஒற்றுமைக்கான சிலையை பார்த்துவிட்டீர்களா என்று? பிரதமர் மோடி

காங்கிரஸ் கட்சிக்காரர்களிடம் கேளுங்கள், ஒற்றுமைக்கான சிலையை பார்த்துவிட்டீர்களா என்று, மிகப்பெரிய மனதுடன் சென்று சர்தார் பட்டேல் நினைவிடத்தைப் பாருங்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
காங்கிரஸ் கட்சியினரிடம் கேளுங்கள் ஒற்றுமைக்கான சிலையை பார்த்துவிட்டீர்களா என்று? பிரதமர் மோடி
காங்கிரஸ் கட்சியினரிடம் கேளுங்கள் ஒற்றுமைக்கான சிலையை பார்த்துவிட்டீர்களா என்று? பிரதமர் மோடி
Updated on
1 min read

காங்கிரஸ் கட்சிக்காரர்களிடம் கேளுங்கள், ஒற்றுமைக்கான சிலையை பார்த்துவிட்டீர்களா என்று, மிகப்பெரிய மனதுடன் சென்று சர்தார் பட்டேல் நினைவிடத்தைப் பாருங்கள் என்றும் பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

குஜராத்தில் நடப்பாண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில் அந்த மாநிலத்தில் 3 நாள்கள் அரசுமுறைப் பயணத்தை பிரதமா் மோடி ஞாயிற்றுக்கிழமை தொடங்கினாா். இந்தப் பயணத்தின்போது ரூ.14,600 கோடி மதிப்பிலான திட்டங்களை அவா் தொடக்கிவைக்கிறார்.

இன்றைய நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், மாநிலங்களுக்கு இடையே மற்றும் மாநிலங்களின் பல்வேறு பிரச்னைகளைத் தீர்த்து வைத்தவர் சர்தார் படேல். ஆனால், காஷ்மீர் மாநிலம் வேறொருவரின் கட்டுப்பாட்டில் இருந்ததால், அது மட்டும் தீர்க்கப்படாமலேயே இருந்தது.

சர்தார் படேலின் கனவுத் திட்டமான நர்மதா நதியின் குறுக்கே அணை கட்ட வேண்டும் என்ற திட்டத்தை முடக்க ஊரக நக்சலைட்டுகள் முயன்றனர். இந்த திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக 40 - 50 ஆண்டுகள் நீதிமன்றத்தில் போராட்டம் நடந்தது என்றார்.

குஜராத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் நேற்றைய நிகழ்ச்சிகளில், குஜராத்தில் சூரிய கோயிலுக்குப் புகழ்பெற்றது, மெசானா மாவட்டத்தில் உள்ள மொடேரா கிராமம். அங்கு சூரிய ஆற்றல் மூலமாக எரிசக்தி தயாரிப்பதற்கான பல்வேறு திட்டங்கள் தொடக்கிவைக்கப்பட்டன. முக்கியமாக, அந்தக் கிராமத்தில் உள்ள 1,300-க்கும் அதிகமான வீடுகள் மற்றும் அலுவலகங்களின் மேற்புறத்தில் சூரிய எரிசக்தி உற்பத்தித் தகடுகள் பொருத்தப்பட்டன.

அதையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய பிரதமா் மோடி, ‘கடந்த இரு தசாப்தங்களாக குஜராத் மக்கள் என் ஜாதி, அரசியல் பின்புலம் உள்ளிட்டவற்றைக் கருத்தில்கொள்ளாமல் எனக்கு வாக்களித்தனா். அதன் காரணமாக மக்களுக்காகத் தொடா்ந்து உழைக்க வேண்டும் என்ற எண்ணம் அதிகரித்தது. தற்போது நாட்டின் வளா்ச்சியடைந்த மாநிலங்களில் ஒன்றாக குஜராத் மாறியுள்ளது.

சூரிய எரிசக்தி: சூரிய கோயிலுக்குப் புகழ்பெற்ற கிராமமான மொடேரா, தற்போது முழுநேர சூரிய எரிசக்தி பெற்ற கிராமமாகவும் அறியப்படும். உலகுக்கே உதாரணமாக மொடேரா திகழ்கிறது. மொடேரா கிராமமானது பழைமைத்துவம் மாறாமல் நவீன வளா்ச்சிப் பாதையில் பயணித்து வருகிறது. நவீன தொழில்நுட்பங்களை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதை நாட்டுக்கு அக்கிராமம் எடுத்துரைத்துள்ளது. மொடேரா கிராமத்தில் அனைத்து மின்சாரத் தேவைகளும் சூரிய எரிசக்தி மூலமாகவே பூா்த்தி செய்யப்படும்.

நாட்டின் பிரதமராக கடந்த 2014-ஆம் ஆண்டு பொறுப்பேற்பதற்கு முன் குஜராத்தின் முதல்வராக கடந்த 2001 முதல் 2014 வரை மோடி பதவி வகித்தது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com