தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

முலாயம் சிங் மறைவு இந்திய அரசியலுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு: காங்கிரஸ்!

சமாஜ்வாதி கட்சி நிறுவனர் முலாயம் சிங் யாதவின் மறைவுக்கு காங்கிரஸ் இரங்கல் தெரிவித்துள்ளதோடு, அவரது மறைவு இந்திய அரசியலுக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு என்று கூறியுள்ளது. 

News image
Updated On :10 அக்டோபர் 2022, 6:01 am

DIN

சமாஜ்வாதி கட்சி நிறுவனர் முலாயம் சிங் யாதவின் மறைவுக்கு காங்கிரஸ் இரங்கல் தெரிவித்துள்ளதோடு, அவரது மறைவு இந்திய அரசியலுக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு என்று கூறியுள்ளது. 

காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வத்ரா கூறுகையில், 

இந்திய அரசியலில் பாதுகாப்பு அமைச்சராகவும், உத்தரப் பிரதேச முதல்வராகவும் இருந்த யாதவின் ஈடு இணையற்ற பங்களிப்பு எப்போதும் நினைவுகூரப்படும்.

அகிலேஷ் யாதவ் மற்றும் அனைத்து அன்புக்குரியவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று இந்தியில் ட்வீட் செய்துள்ளார்.

காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், யாதவ் ஒரு உறுதியானவர். அனைவரையும் கவர்ந்தவர். உ.பி.யின் முதல்வராக அவர் பதவி வகித்த காலம் மிகவும் பயனுள்ளதாக இருந்தது.

காங்கிரஸ் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில்,

சமாஜ்வாடி கட்சியின் புரவலரும், நாட்டின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சரும், உத்தரப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வருமான ஸ்ரீ முலாயம் சிங் யாதவின் மறைவு இந்திய அரசியலுக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு.

அகிலேஷ் யாதவின் தந்தை முலாயம் சிங் யாதவின் மறைவுக்கு காங்கிரஸ் மூத்த தலைவரும், அக்கட்சியின் தேர்தல் போட்டியாளருமான சசி தரூர், இவரது மறைவு அனைத்து இந்தியர்களுக்கும் பெரும் இழப்பு. ஓம் சாந்தி என்று இரங்கல் தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.  

சமாஜ்வாடி கட்சித் தலைவர் நீண்டகாலமாக உடல் நலக்குறைவால் குருகிராமில் உள்ள மருத்துவமனையில் திங்கள்கிழமை காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.