உத்தரப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் முலாயம் சிங் யாதவின் உடலுக்கு நாளை இறுதிச் சடங்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சமாஜவாதி கட்சியின் மூத்த தலைவர் முலாயம் சிங் யாதவ், உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், இன்று திங்கள்கிழமை காலை காலமானார். அவருக்கு வயது 82.
ஹரியாணா மாநிலம் குருகிராம் மருத்துவமனையில் உயிரிழந்த முலாயம் சிங்கின் உடல், அவரது சொந்த ஊரான சைஃபாய் பகுதியில் உள்ள கிராமத்திற்கு இன்று எடுத்துச் செல்லப்படுகிறது.
படிக்க | முலாயம் சிங் யாதவ் காலமானார்
அங்கு, உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத், அரசியல் கட்சித் தலைவர்கள், சமாஜவாதி தொண்டர்கள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தவுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து நாளை பிற்பகல் 3 மணிக்கு சொந்த கிராமத்திலேயே அரசின் முழு மரியாதை அளிக்கப்பட்டு, அவரது உடலுக்கு இறுதிச் சடங்கு நடைபெறவுள்ளது.
மேலும், முலாயம் சிங்கின் உடலுக்கு அஞ்சலி செலுத்த பல்வேறு கட்சிகளின் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் வரவுள்ளதால் சைஃபாய் பகுதி முழுவதும் காவல்துறையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

துருவ நட்சத்திரம் படத்தை வெளியிட அனுமதி! உயர் நீதிமன்றம் உத்தரவு!

ஓய்வூதியதாரர்களுக்கு ஜாக்பாட்! குறைந்தபட்ச ஓய்வூதியம் 7.5 மடங்கு உயர்வா?
டிரம்ப்பின் நீரிணை! ஹோர்முஸை பெயர்மாற்றம் செய்து அமெரிக்க அதிபர் வெளியிட்ட வரைபடம்!

970 கோல்கள்: கோப்பை இல்லையென கிண்டல் செய்தவர்களுக்கு சைகையில் பதிலளித்த ரொனால்டோ!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


