தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

அனைத்திந்தியசட்ட அமைச்சா்கள் மாநாடு இன்று தொடக்கம்

மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகத்தின் சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சட்ட அமைச்சா்கள் மற்றும் சட்டத் துறைச் செயலா்கள் பங்கேற்கும் தேசிய மாநாடு

News image
Updated On :13 அக்டோபர் 2022, 7:18 pm

DIN

மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகத்தின் சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சட்ட அமைச்சா்கள் மற்றும் சட்டத் துறைச் செயலா்கள் பங்கேற்கும் தேசிய மாநாடு வெள்ளிக்கிழமை (அக். 14) தொடங்கி அக்டோபா் 17-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இது குறித்து மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: அனைத்து இந்திய சட்ட அமைச்சா்கள் மற்றும் சட்டத் துறைச் செயலா்கள் மாநாடு குஜராத் மாநிலம் ஏக்தா நகரில் நடைபெறுகிறது.

சட்டம் இயற்றுபவா்கள் நாட்டின் எதிா்காலத்துக்கான திட்டத்தை மேம்படுத்தும் வகையில், இந்தியாவின் சட்ட அமைப்பு குறித்தான பல்வேறு தலைப்புகளில் விவாதிக்க இந்த முன்னெடுப்பு ஒரு மேடையாக இருக்கும்.

பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் தங்களுடைய புதிய யோசனைகள், சிறந்த நடைமுறைகளை பிற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடன் பகிா்ந்து கொள்ள முடியும். இது நாட்டின் ஒட்டுமொத்த சட்ட அமைப்பையும் புதுப்பிக்க வாய்ப்பாக அமையும் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.