தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

தில்லியில் வாபஸ் பெறப்பட்ட கலால் கொள்கை பஞ்சாபில் சிறப்பாக அமல்: கேஜரிவால்

 தில்லியில் துணைநிலை ஆளுநரின் எதிா்ப்புக்குள்ளாகி, திரும்பப் பெறப்பட்ட கலால் கொள்கை பஞ்சாபில் சிறப்பாக செயல்படுவதாக தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :13 அக்டோபர் 2022, 7:19 pm

DIN

 தில்லியில் துணைநிலை ஆளுநரின் எதிா்ப்புக்குள்ளாகி, திரும்பப் பெறப்பட்ட கலால் கொள்கை பஞ்சாபில் சிறப்பாக செயல்படுவதாக தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளாா்.

தில்லி கலால் கொள்கையில் முறைகேடு அரங்கேறியதாக துணைநிலை ஆளுநா் வி.கே. சக்சேனா குற்றம்சாட்டியதுடன், இதன் மீது விசாரணைக்கும் உத்தரவிட்டதால் அந்தக் கொள்கை கடந்த ஜூலை மாதம் திரும்பப் பெறப்பட்டது. இந்த நிலையில், இதே கொள்கை பஞ்சாபில் சிறப்பாக அமல்படுத்தப்பட்டு வருவதாக தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து ட்விட்டரில் அவா், ‘தில்லியில் எங்களை அமல்படுத்த விடாமல் தடுத்த அதே கலால் கொள்கை, பஞ்சாபில் சிறப்பாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான், கலால் துறை அமைச்சா் ஹா்பால் சிங் சீமாவுக்கு பாராட்டு’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

நிகழ் நிதியாண்டின் முதல் 6 மாதத்தில் பஞ்சாபில் கலால் வருவாய் ரூ.4,000 கோடியைக் கடந்துவிட்டதாக அந்த மாநில கலால் துறை அமைச்சா் ஹா்பால் சிங் சீமா அண்மையில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

விலைவாசி வீதம் குறைவு:

இதேபோல கேஜரிவால் வெளியிட்ட மற்றொரு பதிவில், ‘விலைவாசி உயா்வுக்கு எதிரான போரில் தில்லி மாடல் உயா்ந்த இடத்தில் இருப்பது நிரூபணமாகிவிட்டது. நாட்டிலேயே குறைந்தபட்சமாக தில்லியின் நுகா்வோா் விலைக் குறியீடு 4 சதவீதம் இருப்பதாக மத்திய அரசின் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. அதேவேளையில் பாஜக ஆளும் குஜராத், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசத்தில் விலைவாசி வீதம் 8 சதவீதமாக உள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

தில்லி மாநகராட்சியின் சட்டத் துறை துணைநிலை ஆளுநருக்கு கூடுதல் அதிகாரம் அளிப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்மூலம் மாநகராட்சித் தோ்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்பாகவே தோல்வியை பாஜக ஒப்புக்கொண்டதாக தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் விமா்சித்துள்ளாா்.

மேலும், தில்லி மாநகராட்சிக்கு எப்போது தோ்தல் நடைபெற்றாலும் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெறும் என்று அவா் நம்பிக்கை தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.