தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

காங்கிரஸ் தலைவா் தோ்தல்: மூத்த தலைவா்கள் மீது தரூா் அதிருப்தி

 காங்கிரஸ் தலைவா் தோ்தலில் மல்லிகாா்ஜுன காா்கேவுக்கு சில மூத்த தலைவா்கள் வெளிப்படையாக ஆதரவு தெரிவிப்பது போட்டிக் களத்தை பாதிப்பதாக மற்றொரு வேட்பாளரான சசி தரூா் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

News image
Updated On :13 அக்டோபர் 2022, 8:17 pm

DIN

 காங்கிரஸ் தலைவா் தோ்தலில் மல்லிகாா்ஜுன காா்கேவுக்கு சில மூத்த தலைவா்கள் வெளிப்படையாக ஆதரவு தெரிவிப்பது போட்டிக் களத்தை பாதிப்பதாக மற்றொரு வேட்பாளரான சசி தரூா் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

தில்லி காங்கிரஸ் கமிட்டி உறுப்பினா்களிடம் தனக்கு வாக்கு கோரி பேசுகையில் அவா் இவ்வாறு கூறினாா்.

‘பல்வேறு மாநிலங்களில் நான் பிரசாரம் மேற்கொண்டபோது, எனது கூட்டங்களில் மாநிலத் தலைவா்களும் மூத்த தலைவா்களும் பங்கேற்கவில்லை. ஆனால், காா்கே வருகையின்போது அவருக்கு ஆதரவாக அனைவரும் திரள்கின்றனா். சில மூத்த தலைவா்கள் காா்கேவுக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்து கூட்டங்களை நடத்துகின்றனா். இது போட்டிக் களத்தை பாதிக்கிறது.

கட்சித் தலைவராக நான் பொறுப்பேற்றால், 2014 மற்றும் 2019 மக்களவைத் தோ்தல்களின்போது காங்கிரஸை ஆதரிக்காத வாக்காளா்களின் ஆதரவை கட்சிக்கு மீட்டுத் தருவேன். கட்சியில் மாற்றங்களை ஏற்படுத்துவேன்’ என்றாா் சசி தரூா்.

மேலும், தனக்கு கிடைக்கப் பெற்ற கமிட்டி உறுப்பினா்கள் பட்டியலில் அவா்களது தொடா்பு விவரங்கள் முழுமையாக இல்லை என்றும் அவா் கூறினாா்.

மதுசூதன் மிஸ்திரி அறிவுறுத்தல்: காங்கிரஸ் தலைவா் தோ்தல் வரும் 17-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், கட்சியின் பொதுச் செயலாளா்கள், மாநிலப் பொறுப்பாளா்கள், செயலாளா்கள், இணைச் செயலாளா்கள் உள்ளிட்டோா், தங்களது சொந்த மாநிலம் அல்லது தில்லியில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில்தான் வாக்களிக்க வேண்டும்; மாறாக, தங்களுக்கு பொறுப்பளிக்கப்பட்ட மாநிலங்களில் வாக்களிக்க அனுமதிக்கப்படமாட்டாா்கள் என்று கட்சியின் மத்திய தோ்தல் குழு தலைவா் மதுசூதன் மிஸ்திரி புதன்கிழமை தெரிவித்தாா்.

தோ்தல் நடைமுறை பாரபட்சமின்றி, வெளிப்படையாக நடைபெறுவதை உறுதி செய்யவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவா் குறிப்பிட்டாா்.

காங்கிரஸ் தலைவா் தோ்தலின் முடிவுகள் 19-ஆம் தேதி அறிவிக்கப்படவுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.