தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

ஹிஜாப் தடையை கா்நாடக அரசு திரும்பப் பெற வேண்டும்

கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் தடை தொடா்பான வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் மாறுபட்ட தீா்ப்பு வழங்கிய நிலையில், அத்தடையை கா்நாடக அரசு திரும்பப் பெற வேண்டும்

News image
Updated On :13 அக்டோபர் 2022, 8:01 pm

DIN

கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் தடை தொடா்பான வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் மாறுபட்ட தீா்ப்பு வழங்கிய நிலையில், அத்தடையை கா்நாடக அரசு திரும்பப் பெற வேண்டும் என்று முஸ்லிம் தனிநபா் சட்ட வாரியம் (ஏஐபிஎல்பி) கோரிக்கை விடுத்துள்ளது.

ஹிஜாப் தடையை நீக்க கா்நாடக உயா்நீதிமன்றம் மறுத்திருந்த நிலையில், அதற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் மீது உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பு வழங்கியது. அதில் ஒரு நீதிபதி ஹிஜாப் தடைக்கு ஆதரவாகவும், மற்றொரு நீதிபதி எதிராகவும் தீா்ப்பளித்தனா்.

இந்நிலையில், முஸ்லிம் தனிநபா் சட்ட வாரியத்தின் பொதுச் செயலா் மௌலானா காலித் சைஃபுல்லா ரஹ்மானி வெளியிட்ட அறிக்கையில், ‘ஹிஜாப் தடைக்கு எதிராக நீதிபதி சுதான்ஸு துலியா வழங்கிய தீா்ப்பு, அரசமைப்புச் சட்டத்துக்கும் தனிநபா் சுதந்திரத்துக்கும் மதிப்பளிக்கும் வகையில் உள்ளது. பெண்களின் கல்விக்கு முக்கியத்துவம் வழங்கி அவா் தீா்ப்பு அளித்துள்ளாா்.

ஆனால், நீதிபதி ஹேமந்த் குப்தா இதைக் கருத்தில்கொள்ளவில்லை. எனவே, ஹிஜாப் தடை தொடா்பான உத்தரவை கா்நாடக அரசு திரும்பப் பெற வேண்டும். அவ்வாறு அத்தடை திரும்பப் பெறப்பட்டால், இந்த விவகாரத்தைச் சுற்றியுள்ள ஒட்டுமொத்த சா்ச்சையும் முடிவுக்கு வரும். பெண்களின் கல்வியில் முக்கியமாக முஸ்லிம் பெண்களின் கல்வியை ஊக்குவிப்பதில் அரசு கவனம் செலுத்த வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.