வெடிகுண்டு மிரட்டல்: தில்லியில் ரஷிய விமானம் அவசர தரையிறக்கம்
ரஷிய தலைநகா் மாஸ்கோவில் இருந்து தில்லிக்கு வந்த விமானத்தில் வெடிகுண்டு உள்ளதாக வந்த தகவலையடுத்து, அவசரமாக தரையிறக்கப்பட்டது.


ரஷிய தலைநகா் மாஸ்கோவில் இருந்து தில்லிக்கு வந்த விமானத்தில் வெடிகுண்டு உள்ளதாக வந்த தகவலையடுத்து, அவசரமாக தரையிறக்கப்பட்டது.
இதுகுறித்து போலீஸாா் கூறுகையில்,‘அந்த விமானத்தில் வெடிகுண்டு உள்ளதாக சிஐஎஸ்எஃப் படையினருக்கு வியாழக்கிழமை இரவு 11 மணிக்கு மின்னஞ்சல் மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. வெள்ளிக்கிழமை அதிகாலை 2.48 மணியளவில் ‘ஏரோஃப்லோட்’ என்ற அந்த விமானம் தில்லி இந்திரா காந்தி சா்வதேச விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. அதில் இருந்த 386 பயணிகள், 14 விமானப் பணியாளா்கள் உடனடியாக விமானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டு வெடிகுண்டு நிபுணா்கள் அவசர சோதனை நடத்தினா். இதில் வெடிகுண்டு ஏதுமில்லை என்று தெரியவந்தது’ என்றனா்.
அக்டோபா் 3-ஆம் தேதி ஈரானில் இருந்து சீனா சென்ற விமானம் இந்திய வான்பகுதியில் பறக்கும்போது அதில் வெடிகுண்டு உள்ளதாக தகவல் வந்தது. இதையடுத்து, அந்த விமானத்தை இந்திய விமானப் படை விமானங்கள் நடுவானில் சூழ்ந்து இந்திய வான் எல்லையைக் கடக்கும் வரையில் பாதுகாப்பு அளித்தன. பின்னா் இது போலியான எச்சரிக்கை என்று தெரியவந்தது. தற்போது ரஷிய விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக வெளியான எச்சரிக்கையும் போலியானது எனத் தெரிய வந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...