தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

நீட் தேர்வுக்கு எதிரான ரிட் மனு: விசாரணை 12 வாரங்களுக்கு ஒத்திவைப்பு

நீட் தேர்வு கட்டாயம் என்ற சட்டத் திருத்தத்திற்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த ரிட் மனு மீதான விசாரணையை 12 வாரங்களுக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. 

News image
Updated On :14 அக்டோபர் 2022, 8:13 am

DIN

நீட் தேர்வு கட்டாயம் என்ற சட்டத் திருத்தத்திற்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த ரிட் மனு மீதான விசாரணையை 12 வாரங்களுக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. 

மருத்துவப் படிப்புக்கு நீட் தேர்வு கட்டாயம் என்ற சட்டத் திருத்தத்துக்கு எதிராக தமிழக அரசு கடந்த 2020ல் தாக்கல் செய்த ரிட் மனு, உச்சநீதிமன்ற நீதிபதிகள் அஜய் ரஸ்தோகி, சி.டி.ரவிக்குமார் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. 

அப்போது தமிழகத்தில் நீட் விலக்கு மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு தற்போது குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதால் வழக்கை ஒத்திவைக்க வேண்டும் என்று தமிழக அரசு கோரிக்கை விடுத்தது. 

தமிழக அரசின் கோரிக்கையை ஏற்ற நீதிபதிகள் வழக்கை 12 வாரங்களுக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளனர். 

முன்னதாக, நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழு நீட் தேர்வு குறித்து ஆய்வு மேற்கொண்டதன் அடிப்படையில் அது தமிழக மாணவர்களின் மருத்துவக் கல்வி கனவை பாதிப்பதாகக் கூறி தமிழக சட்டப்பேரவையில் நீட் தேர்வுக்கு எதிராக மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.