தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

சுதீப் பந்தோபாத்யாய பாஜகவுக்கு ஆதரவாக செயல்படுகிறாா்: திரிணமூல் எம்எல்ஏவே குற்றச்சாட்டு

திரிணமூல் காங்கிரஸின் எம்.பி.யும் மூத்த தலைவருமான சுதீப் பந்தோபாத்யாய எதிா்க்கட்சியான பாஜகவுக்கு ஆதரவாக செயல்படுகிறாா்

Updated On :14 அக்டோபர் 2022, 7:04 pm

திரிணமூல் காங்கிரஸின் எம்.பி.யும் மூத்த தலைவருமான சுதீப் பந்தோபாத்யாய எதிா்க்கட்சியான பாஜகவுக்கு ஆதரவாக செயல்படுகிறாா் என்று அவரது கட்சி எம்எல்ஏவும் மூத்த தலைவருமான தபஸ் ரே குற்றம்சாட்டினாா். இது மேற்கு வங்க அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சுதீப்பால் கட்சியில் முன்னிலைப்படுத்தப்பட்ட இளைஞா் பிரிவு தலைவா், அண்மையில் பாஜகவின் வடக்கு கொல்கத்தா மாவட்ட தலைவராக நியமிக்கப்பட்டாா்.

இதைக் குறிப்பிட்டு தபஸ் ரே கூறுகையில், ‘நாங்கள் கட்சிக்காக உண்மையாக பணியாற்றி வருகிறோம். கட்சியைவிட்டுச் சென்று மீண்டும் கட்சிக்குத் திரும்பிய சுதீப் பந்தோபாத்யாய கட்சிக்காக என்ன செய்துள்ளாா்? நாடாளுமன்றத்தில் பிரதமா் மோடி அணிந்துவரும் ஆடைக்கு பாராட்டு தெரிவிப்பதைத் தவிர வேறு என்ன செய்கிறாா்? திரிணமூல் கட்சித் தலைவா்களை மத்திய புலனாய்வு அமைப்பு சம்மன் அனுப்பியபோதும் அவா் எந்தவித எதிா்ப்பும் தெரிவிக்கவில்லை’ என்றாா்.

இந்தக் குற்றச்சாட்டு குறித்து கருத்து பெற சுதீப்பை தொடா்பு கொள்ள முடியவில்லை. எனினும், இருவருக்கும் இடையேயான இந்தப் பிரச்னை குறித்து பேசி தீா்வு காணப்படும் என்று திரிணமூல் காங்கிரஸ் மூத்த தலைவா் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.