நாட்டில் கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் 26,618 ஆகக் குறைவு!
நாட்டில் புதிதாக 2,430 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மேலும், 17 பேர் உயிரிழந்துள்ளனர்.


நாட்டில் புதிதாக 2,430 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மேலும், 17 பேர் உயிரிழந்துள்ளனர்.
கரோனா பாதிப்பு விவரங்களை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தினமும் வெளியிட்டு வருகிறது.
இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் புதிதாக2,430 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. நேற்று ஒரே நாளில் 17 பேர் பலியானதை அடுத்து, இறப்பு எண்ணிக்கை 5,28,874 ஆக உயர்ந்துள்ளது.
மேலும், தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 26,618 ஆகக் குறைந்துள்ளது.
நாட்டில் இதுவரை தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4,40,70,935 ஆக பதிவாகியுள்ளது. குணமடைந்தோரின் விகிதம் 98.76% ஆக அதிகரித்துள்ளது.
நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தின் கீழ் இதுவரை 2,19,27,15,971 டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. நேற்று ஒரேநாளில் மட்டும் 5,82,727 டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | ‘நேட்டோவில் உக்ரைன் இணைந்தால் மூன்றாம் உலகப் போா் வெடிக்கும்’
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...