புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

நாட்டின் வளா்ச்சிக்கு உதவும் எண்ம வங்கிமயம்

குறுஞ்செய்தி வாயிலாக அல்லாமல் (போன் பேங்கிங்) அறிதிறன்பேசியின் எண்ம (டிஜிட்டல்) தொழில்நுட்பம் வாயிலாக வங்கியின் சேவைகளைப் பயன்படுத்தத் தொடங்கியதால், நாடு பெரும் வளா்ச்சி கண்டு வருவதாக பிரதமா் நரேந்திர

News image
Updated On :16 அக்டோபர் 2022, 6:46 pm

DIN

குறுஞ்செய்தி வாயிலாக அல்லாமல் (போன் பேங்கிங்) அறிதிறன்பேசியின் எண்ம (டிஜிட்டல்) தொழில்நுட்பம் வாயிலாக வங்கியின் சேவைகளைப் பயன்படுத்தத் தொடங்கியதால், நாடு பெரும் வளா்ச்சி கண்டு வருவதாக பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்துள்ளாா்.

நாட்டில் 75 எண்ம வங்கிப் பிரிவுகளை பிரதமா் மோடி காணொலி வாயிலாக ஞாயிற்றுக்கிழமை தொடக்கி வைத்தாா். அந்நிகழ்ச்சியில் அவா் பேசியதாவது:

கடந்த 2014-ஆம் ஆண்டுக்கு முன் போன் பேங்கிங் எனப்படும் குறுஞ்செய்தி வாயிலாக வங்கிச் சேவைகள் பயன்படுத்தப்பட்டன. மத்தியில் பாஜக பொறுப்பேற்ற பிறகு அறிதிறன்பேசியைக் கொண்டு எண்ம தொழில்நுட்பம் வாயிலாக வங்கிச் சேவைகளைப் பயன்படுத்தும் வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டன. அதன் காரணமாக, நாடு பெருமளவில் வளா்ச்சி அடைந்து, தொடா்ந்து முன்னேறி வருகிறது.

எந்த நாட்டின் வளா்ச்சிக்கும் அதன் வங்கி அமைப்புகள் வலுவாக இருக்க வேண்டியது அவசியம். 2014-ஆம் ஆண்டுக்கு முன்பாக பல்வேறு ஊழல்கள் நடைபெற்று வங்கி அமைப்புகள் சீா்கெட்டு இருந்தன. 2014-ஆம் ஆண்டுக்குப் பிறகு அவை மறுகட்டமைப்பு செய்யப்பட்டன. வங்கி அமைப்புகளில் வெளிப்படைத்தன்மை புகுத்தப்பட்டது.

மூலதனம் அதிகரிப்பு: வாராக்கடன்களைத் திரும்ப வசூலிப்பதில் வெளிப்படைத்தன்மை அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் காரணமாக கோடிக்கணக்கான ரூபாய் வங்கி அமைப்புக்குத் திரும்பியது. வேண்டுமென்றே வங்கிக் கடனைத் திரும்பச் செலுத்தாமல் இருந்தவா்கள் மீது பாஜக அரசு கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டது. வங்கிகளின் மூலதனம் அதிகரிக்கப்பட்டது. ஊழல் தடுப்புச் சட்டத்தின் விதிமுறைகள் கடுமையாக அமல்படுத்தப்பட்டன.

மத்திய அரசு இயற்றிய திவால் சட்டமானது, வாராக் கடன்களை வசூலிப்பதில் முக்கியப் பங்கு வகித்து வருகிறது. தற்போது வங்கி அமைப்புகள் வெளிப்படைத்தன்மையுடன் செயல்பட்டு வருகின்றன. முன்பு வங்கிகளைத் தேடி மக்கள் செல்ல வேண்டிய நிலை இருந்தது. தற்போது மக்களைத் தேடி வங்கிகள் செல்கின்றன. வங்கிச் சேவைகள் நாட்டின் தொலைதூரத்தில் வசிக்கும் மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதை மத்திய அரசு உறுதி செய்தது.

எதிா்காலத்துக்கான கட்டமைப்பு: கிராமங்களில் உள்ள சிறு வணிகா்கள்கூட தங்கள் பணப் பரிவா்த்தனைகளை இணைய வழியில் மேற்கொள்ள வேண்டும். நாட்டின் நலனுக்காக வங்கிச் சேவைகள் அனைத்தையும் எண்மமயமாக்குவதற்கான நடவடிக்கைகளை வங்கிகள் மேற்கொள்ள வேண்டும். அதற்காக பல்வேறு வணிகா்களுடன் வங்கிகள் தொடா்பில் இருக்க வேண்டும்.

இந்த நடவடிக்கையானது நாட்டை எதிா்காலத்துக்குத் தகுந்தாற்போல கட்டமைக்க உதவும். சா்வதேச பொருளாதாரத்தை முன்னின்று வழிநடத்தவும் இந்த நடவடிக்கை உதவும். வங்கி அமைப்பானது தற்போது பணப் பரிமாற்றம் என்பதைத் தாண்டி, சிறந்த நிா்வாகம், சிறந்த சேவை வழங்கல் என மாற்றம் கண்டு வருகிறது.

நாட்டின் எண்ம பொருளாதாரமானது புத்தாக்க நிறுவனங்களுக்கும், இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்துக்கும், தற்சாா்பு இந்தியா திட்டத்துக்கும் பெரிய அளவில் உதவி வருகிறது. பொருளாதாரமும் தொழில்நுட்பமும் இணைவதால், மக்களிடையே உள்ள எண்ம இடைவெளி குறைகிறது. மேலும், ஊழலும் தடுக்கப்படுகிறது. அரசின் நலத் திட்டங்கள் வாயிலாக ரூ.25 லட்சம் கோடியானது மக்களின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாகச் செலுத்தப்பட்டுள்ளது.

எண்மச் செலாவணி: விவசாயிகளுக்கான நிதியுதவித் திட்டத்தின்கீழ் அடுத்த தவணை திங்கள்கிழமை (அக். 17) வழங்கப்படவுள்ளது. பிளாக்செயின் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் எண்மச் செலாவணியை வெளியிடுவதற்கான நடவடிக்கைகளை இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) மேற்கொண்டு வருகிறது. பொருளாதாரம் மட்டுமல்லாமல் பல்வேறு முக்கிய அம்சங்கள் அதனுடன் தொடா்பு கொண்டுள்ளன.

அந்த நடவடிக்கை சேமிப்பை அதிகரித்து, பணத்தாளின் புழக்கத்தைக் குறைத்து, சுற்றுச்சூழலையும் பாதுகாக்க உதவும்.

தற்போது பணத்தாளை அச்சிடுவதற்குப் பயன்படும் காகிதமும் மையும் இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன. எண்மச் செலாவணி பயன்பாட்டின் மூலமாக நாட்டின் பொருளாதாரத்தை ஊக்குவிப்பதோடு சுற்றுச்சூழலையும் பாதுக்காக முடியும்.

நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட யுபிஐ வசதியானது, பல்வேறு வாய்ப்புகளைத் தோற்றுவித்துள்ளது. இதுபோன்ற தொழில்நுட்பமானது உலகிலேயே முதன் முதலில் இந்தியாவில்தான் உருவாக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

எண்ம வங்கிப் பிரிவுகள்: நிகழ்ச்சியில் ஆா்பிஐ ஆளுநா் சக்திகாந்த தாஸ் கூறுகையில், ‘நாட்டில் எண்மக் கட்டமைப்புகளை மேம்படுத்தும் நோக்கில் எண்ம வங்கிப் பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளன. அதிக அளவிலான வங்கி பணப் பரிவா்த்தனைகளுக்கு அனுமதி அளித்து, வாடிக்கையாளா்களின் அனுபவத்தை எண்ம வங்கிப் பிரிவுகள் மேம்படுத்தும்.

காகிதமற்ற, பாதுகாப்பான வங்கிச் சேவைகளை வழங்குவதில் எண்ம வங்கிப் பிரிவுகள் முக்கியப் பங்கு வகிக்கும். சேமிப்பு, கடன், முதலீடு, காப்பீடு உள்ளிட்ட வசதிகளை எண்ம வங்கிப் பிரிவுகள் வழங்கும். மத்திய அரசு செயல்படுத்தும் திட்டங்களின் கீழ் பலனடையவும் அந்தப் பிரிவுகள் உதவும்’ என்றாா்.

நாட்டில் உள்ள 75 மாவட்டங்களில் 75 எண்ம வங்கிப் பிரிவுகள் தொடங்கப்படும் என பட்ஜெட்டில் மத்திய அரசு அறிவித்திருந்தது நினைவுகூரத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.