பாராளுமன்றத்திலிருந்து தெரு வரை போராட வேண்டும்: மல்லிகார்ஜுன கார்கே

காங்கிரஸ் கட்சியின் தலைவரைத் தேர்வு செய்ய நாளை (அக். 17) தேர்தல் நடைபெற உள்ளது.
கோப்புப் படம்
கோப்புப் படம்
Published on
Updated on
1 min read

காங்கிரஸ் கட்சியின் தலைவரைத் தேர்வு செய்ய நாளை (அக். 17) தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் செப்டம்பர் 24 ஆம் தேதி தொடங்கி செப். 30இல் முடிவடைந்தது. 

நாளை நடைபெற உள்ள காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடும் அவர், தனக்கு ஆதரவு திரட்டுவதற்காக மாநிலங்கள்தோறும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், கர்நாடகாவில் காங்கிரஸ் தலைவர் பதவிக்கான வேட்பாளர் மல்லிகார்ஜுன கார்கே பேசியதாவது: 

வேலையின்மை அதிகரிக்கிறது. உள்நாட்டு உற்பத்தி குறைகிறது. அதனால் பணவீக்கம் ஏற்படுகிறது. டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்துள்ளது. பெட்ரோல், டீசல் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றமாக இருந்து வருகிறது. 

மதத்தினை வைத்து பாஜக - ஆர்எஸ்எஸ் நாட்டினை பிளவுப்படுத்துகிறது. தாழ்த்தப்பட்ட மக்களையும் பின்தங்கியவர்களையும் பிரிக்கிறார்கள். அவர்கள் எல்லாவற்றையும் தேர்தல் நோக்கத்துடனயே பார்க்கிறார்கள். பாஜக - ஆர்எஸ்எஸ் ஆகியவற்றின் பழிவாங்கும் சிந்தாந்ததோடு போராடுவதும், காங்கிரஸ் அமைப்பினை பலப்படுத்துவதும் எனது பணி. 

கார்நாடகாவில் 100 சதவிகிதம் எங்கள் கட்சி ஆட்சிக்கு வரும். எங்கள் தலைவர்கள் கடினமாக உழைக்கிறார்கள். பாஜகவினர் இங்கு அரசு இயந்திரத்தை தவறாக உபயோகிக்கின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com