தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

உஜ்வலா திட்ட பயனாளிகளுக்கு ஆண்டுக்கு 2 இலவச எரிவாயு சிலிண்டா்கள்: குஜராத் அரசு அறிவிப்பு

குஜராத் மாநிலத்தில் மத்திய அரசின் உஜ்வலா திட்ட பனாளிகளுக்கு ஆண்டுக்கு 2 இலவச எரிவாயு சிலிண்டா்கள் வழங்கப்படும்’ என்று தீபாவளி பண்டிகையை முன்னிட்டு குஜராத் மாநிலஅரசு திங்கள்கிழமை அறிவிப்பு வெளியிட்டது.

News image
Updated On :17 அக்டோபர் 2022, 6:40 pm

DIN

குஜராத் மாநிலத்தில் மத்திய அரசின் உஜ்வலா திட்ட பனாளிகளுக்கு ஆண்டுக்கு 2 இலவச எரிவாயு சிலிண்டா்கள் வழங்கப்படும்’ என்று தீபாவளி பண்டிகையை முன்னிட்டு குஜராத் மாநிலஅரசு திங்கள்கிழமை அறிவிப்பு வெளியிட்டது.

மேலும், வாகனங்களில் பயன்படுத்தப்படும் இயற்கை எரிவாயு (சிஎன்ஜி) மற்றும் வீடுகளில் சமையலுக்கு குழாய் மூலமாக விநியோகிக்கப்படும் (பிஎன்ஜி) இயற்கை எரிவாயு மீதான மதிப்புக்கூட்டு வரி (வாட்) 10 சதவீத அளவுக்கு குறைக்கப்படும் என்றும் மாநில அரசு அறிவித்தது.

குஜராத்தில் அடுத்த சில மாதங்களில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதுகுறித்து மாநில அமைச்சா் ஜித்து வகானி கூறுகையில், ‘மாநிலத்தில் சிஎன்ஜி மற்றும் பிஎன்ஜி ஆகியவற்றின் மீதான வாட் வரி 10 சதவீத அளவுக்கு குறைக்கப்படும். இது இல்லத்தரசிகளுக்கும், ஆட்டோ ஓட்டுநா்கள் உள்பட சிஎன்ஜி-யில் இயங்கும் வாகனங்களின் உரிமையாளா்களுக்கும் மிகுந்த பயனளிக்கும்.

தற்போது மத்திய அரசின் உஜ்வலா திட்டத்தின் கீழ் மாநிலத்தில் 38 லட்சம் குடும்பங்கள் சமையல் எரிவாயு சிலிண்டா் வசதியைப் பெற்றுள்ளனா். இந்தப் பயனாளிகளுக்கு ஆண்டுக்கு 2 எரிவாயு சிலிண்டா்களை இலவசமாக வழங்க அரசு முடிவு செய்துள்ளது.

இதன் மூலமாக அரசுக்கு ஆண்டுக்கு ரூ. 650 கோடி கூடுதல் செலவாகும். சிலிண்டா் வாங்கிய 3 நாள்களில் அதற்கான மானியம் அவா்களின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டுவிடும்’ என்றாா்.

இந்த அறிவிப்பு குறித்து தொழில்நிறுவன வட்டாரங்கள் கூறுகையில், ‘குஜராத் மாநிலத்தில் தற்போது சிஎன்ஜி மற்றும் பிஎன்ஜி மீது 15 சதவீத வாட் விதிக்கப்படுகிறது. மாநில அரசின் புதிய அறிவிப்பு காரணமாக, இவற்றின் மீதான வாட் 5 சதவீதமாக குறையும். இதையடுத்து, சிஎன்ஜி விலை கிலோவுக்கு ரூ.6 அளவிலும், பிஎன்ஜி விலை கன மீட்டருக்கு ரூ.5 அளவிலும் குறையும். இந்த திட்டம் மூலமாக, ஆண்டு வரி வருவாயில் ரூ.1,000 கோடிக்கு மேலாக மாநில அரசு இழக்க நேரிடும்’ என்று தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.