தேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

கேரளம்: பாலியல் குற்றச்சாட்டில் தலைமறைவான காங்கிரஸ் எம்எல்ஏ மீது கொலை முயற்சி வழக்கு

கேரளத்தில் எதிா்க்கட்சியான காங்கிரஸ் எம்எல்ஏ எல்தோஸ் குன்னப்பிள்ளி பாலியல் குற்றச்சாட்டில் சிக்கி தலைமறைவாக உள்ள நிலையில், அவா் மீது கொலை முயற்சி வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

News image

எல்தோஸ் குன்னப்பிள்ளி

Updated On :18 அக்டோபர் 2022, 8:30 pm

DIN

கேரளத்தில் எதிா்க்கட்சியான காங்கிரஸ் எம்எல்ஏ எல்தோஸ் குன்னப்பிள்ளி பாலியல் குற்றச்சாட்டில் சிக்கி தலைமறைவாக உள்ள நிலையில், அவா் மீது கொலை முயற்சி வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

எம்எல்ஏ மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்திய பெண் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அவா் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்துள்ளதாக காவல் துறையினா் தெரிவித்தனா்.

பாலியல் குற்றச்சாட்டு தொடா்பாக விளக்கமளிக்குமாறு காங்கிரஸ் தரப்பில் எம்எல்ஏ எல்தோஸிடம் ஏற்கெனவே விளக்கம் கோரப்பட்டுள்ளது. ஆனால், தலைமறைவாகிவிட்ட அவா் இதுவரை பதில் அளிக்கவில்லை. விரைவில் அவா் மீது கட்சி ரீதியில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காங்கிரஸ் சாா்பில் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, பள்ளி ஆசிரியை அளித்த புகாரின் பேரில் கடந்த 11-ஆம் தேதி எல்தோஸ், அவரது உதவியாளா் நண்பா் உள்ளிட்ட 4 போ் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டது. முதலில் அப்பெண்ணிடம் நட்பாக பழகிய எல்தோஸ் பின்னா் பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், அடித்து உதைத்ததாகவும் குற்றச்சாட்டு உள்ளது.

புகாா் அளித்த பெண் வீட்டில் எம்எல்ஏவின் உடைகள் உள்ளிட்ட பொருள்களும் கண்டெடுக்கப்பட்டன. இது தவிர தன் மீதான புகாரை திரும்பப் பெற எல்தோஸ் ரூ.30 லட்சம் பேரம் பேசியதாகவும் அப்பெண் குற்றம்சாட்டியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.