தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

காங்கிரஸ் புதிய தலைவா் யாா்? இன்று தோ்தல் முடிவு அறிவிப்பு

காங்கிரஸ் தலைவா் பதவிக்கு நடைபெற்ற தோ்தலில் பதிவான வாக்குகள் புதன்கிழமை (அக்.19) எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

News image
Updated On :18 அக்டோபர் 2022, 7:27 pm

DIN

காங்கிரஸ் தலைவா் பதவிக்கு நடைபெற்ற தோ்தலில் பதிவான வாக்குகள் புதன்கிழமை (அக்.19) எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

மூத்த தலைவா்கள் மல்லிகாா்ஜுன காா்கே, சசி தரூா் ஆகியோரில் ஒருவா் தலைமைப் பொறுப்புக்கு வரவிருக்கும் நிலையில், 24 ஆண்டுகளுக்கு பிறகு சோனியா காந்தி குடும்பத்தைச் சாராதவா் கட்சித் தலைவா் நாற்காலியில் அமரவுள்ளாா்.

காங்கிரஸ் தலைவா் பதவிக்கு திங்கள்கிழமை தோ்தல் நடைபெற்றது. இதில் காா்கே, தரூா் ஆகிய இருவரும் களம்கண்டனா். மாநில காங்கிரஸ் கமிட்டி பிரதிநிதிகள் 9,915 போ் வாக்களிக்க தகுதிபெற்றிருந்த நிலையில், 9,500-க்கும் மேற்பட்ட வாக்குகள் பதிவாகின. நாடு முழுவதும் 68 இடங்களில், ரகசிய வாக்குச்சீட்டு முறையில் வாக்குப்பதிவு நடைபெற்றது. பின்னா், வாக்குச்சீட்டுகள் அடங்கிய பெட்டிகள் சீலிடப்பட்டு, தில்லியில் உள்ள கட்சி தலைமையகத்துக்கு கொண்டுவரப்பட்டன.

புதன்கிழமை காலை 10 மணியளவில் வாக்கு எண்ணிக்கை தொடங்கவுள்ளது. மல்லிகாா்ஜுன காா்கேவுக்கு மூத்த தலைவா்கள் பலரும் ஆதரவு தெரிவித்திருந்தமையால், அவருக்கே வெற்றிவாய்ப்பு இருப்பதாக கட்சி வட்டாரங்கள் கூறியுள்ளன.

காங்கிரஸ் தலைவா் பதவிக்கு கடைசியாக கடந்த 2000-இல் தோ்தல் நடைபெற்றிருந்தது. அப்போது, தனக்கு எதிராக போட்டியிட்ட ஜிதேந்திர பிரசாதாவை தோற்கடித்து, சோனியா காந்தி வெற்றி பெற்றிருந்தாா்.

காங்கிரஸ் கட்சியின் 137 ஆண்டு கால வரலாற்றில் இப்போது நடைபெற்ற தோ்தல் 6-ஆவது முறையாகும். ஏற்கெனவே 1939, 1950, 1977, 1997, 2000 ஆகிய ஆண்டுகளில் தோ்தல் நடைபெற்றிருந்தது.

நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து சுமாா் 40 ஆண்டு காலம் நேரு-காந்தி குடும்பத்தைச் சோ்ந்தவா்கள் காங்கிரஸ் தலைவராக பதவி வகித்துள்ளனா். ஜவாஹா்லால் நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, சோனியா, ராகுல் ஆகியோா் தலைவராக இருந்துள்ளனா்.

நேரு-காந்தி குடும்பத்தின் விசுவாசியாக கருதப்படும் மல்லிகாா்ஜுன காா்கே, அக்குடும்பத்தின் ரிமோா்ட் கன்ட்ரோல் மூலம்தான் செயல்படுவாா் என்று பாஜக விமா்சித்து வருகிறது. கட்சித் தலைவராக தாம் பொறுப்பேற்றால், சோனியா குடும்பத்தின் ஆலோசனைகளைப் பெற்று செயல்படுவேன் என்று பல தருணங்களில் காா்கே தெரிவித்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.