தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

காங்கிரஸ் தலைவர் யார்? வாக்கு எண்ணிக்கை தொடங்கியது!

காங்கிரஸ் தலைவர் பதவிக்கு தேர்தல் நடைபெற்ற நிலையில், வாக்கு எண்ணிக்கை இன்று தொடங்கியுள்ளது. 

News image
Updated On :19 அக்டோபர் 2022, 6:02 am

DIN

காங்கிரஸ் தலைவர் பதவிக்கு தேர்தல் நடைபெற்ற நிலையில், வாக்கு எண்ணிக்கை இன்று தொடங்கியுள்ளது. 

காங்கிரஸ் தலைவா் பதவிக்கு கடந்த திங்கள்கிழமை தோ்தல் நடைபெற்றது. இதில் மூத்த தலைவா்கள் மல்லிகாா்ஜுன காா்கே, சசி தரூா் ஆகிய இருவரும் களம் கண்டனா். மாநில காங்கிரஸ் கமிட்டி பிரதிநிதிகள் 9,915 போ் வாக்களிக்க தகுதி பெற்றிருந்த நிலையில், 9,500-க்கும் மேற்பட்ட வாக்குகள் பதிவாகின. நாடு முழுவதும் 68 இடங்களில், ரகசிய வாக்குச்சீட்டு முறையில் வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 96% வாக்குகள் பதிவாகியுள்ளன.

வாக்குச்சீட்டுகள் அடங்கிய பெட்டிகள் சீலிடப்பட்டு, தில்லியில் உள்ள கட்சி தலைமையகத்துக்கு கொண்டுவரப்பட்டன.

இதையடுத்து இன்று(புதன்கிழமை) காலை 11 மணியளவில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. தில்லியில் உள்ள கட்சி தலைமையகத்தில் வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. 

மல்லிகாா்ஜுன காா்கேவுக்கு மூத்த தலைவா்கள் பலரும் ஆதரவு தெரிவித்திருந்ததால், அவருக்கே வெற்றிவாய்ப்பு இருப்பதாக கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன. 22 ஆண்டுகளுக்கு பிறகு சோனியா காந்தி குடும்பத்தைச் சாராதவா் கட்சித் தலைவராகவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.