கார்கே தலைமையில் காங்கிரஸ் வலுவடையும்: கமல்நாத்

புதிய காங்கிரஸ் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மல்லிகார்ஜுன கார்கேவுக்கு மத்தியப் பிரதேச காங்கிரஸ் தலைவர் கமல்நாத் மற்றும் கட்சியின் மூத்த தலைவர் திக்விஜய் சிங் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர். 
கார்கே தலைமையில் காங்கிரஸ் வலுவடையும்: கமல்நாத்
Published on
Updated on
1 min read

புதிய காங்கிரஸ் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மல்லிகார்ஜுன கார்கேவுக்கு மத்தியப் பிரதேச காங்கிரஸ் தலைவர் கமல்நாத் மற்றும் கட்சியின் மூத்த தலைவர் திக்விஜய் சிங் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர். 

கட்சியின் 137 ஆண்டுக் கால வரலாற்றில் ஆறாவது முறையாகத் தேர்தல் போட்டியில் சசி தரூரை கார்கே வெற்றி பெற்றுள்ளார். 

கார்கேவுக்கு வாழ்த்து தெரிவித்த முன்னாள் முதல்வர் கமல்நாத், அவரது பரந்த அனுபவம் , காங்கிரஸ் அமைப்புக்கு மிகவும் பயன் அளிக்கும் என்றும், திறமையான தலைமையின் கீழ் கட்சி புதிய உயரங்களை எட்டுவது மட்டுமல்லாமல், மேலும் வலுப்பெறும் என்றும் நான் உறுதியாக நம்புகிறேன். 

ஜனநாயக செயல்முறை மூலம் காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்காக கார்கேவுக்கு மாநிலங்களவை உறுப்பினர் திக்விஜய் சிங்கும் வாழ்த்து தெரிவித்தார். கார்கேவின் அனுபவத்தால் கட்சி பலனடையும், என்றார்.

மாநிலக் கட்சி அலுவலகத்தில் காங்கிரஸ் கட்சியினர் கார்கேவின் வெற்றியை இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

முன்னதாக, காங்கிரஸ் தலைவர் தேர்தலில் பதிவான 9,385 வாக்குகளில் கார்கே 7,897 வாக்குகளும், சசி தரூர் 1,072 வாக்குகளும் பெற்ற நிலையில், 416 வாக்குகள் செல்லாதவை என அறிவிக்கப்பட்டதாக காங்கிரஸ் கட்சியின் மத்திய தேர்தல் ஆணையத் தலைவர் மதுசூதன் மிஸ்திரி அறிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com