எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

திருமணம் செய்துகொள்வதாக இளம்பெண்ணை ஏமாற்றிய மருத்துவர் கைது!

ஒடிசாவின், புவனேஸ்வரில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற வந்த நோயாளியின் மகளை ஏமாற்றிய மருத்துவர் கைது செய்யப்பட்டார். 

News image
Updated On :19 அக்டோபர் 2022, 10:37 am

DIN

ஒடிசாவின், புவனேஸ்வரில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற வந்த நோயாளியின் மகளை ஏமாற்றிய மருத்துவர் கைது செய்யப்பட்டார். 

புவனேஸ்வரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் சிகிச்சை பெற்று வந்தார் நோயாளி ஒருவர். சிகிச்சையின்போது தன் மகளை திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறியுள்ளார் மருத்துவர். 

மருத்துவர் அளித்த திருமண வாக்குறுதியின் பேரில், 26 வயதுடைய பெண்ணும் மருத்துவரிடம் நெருங்கிப் பழகியுள்ளார். பின்னர், தந்தையின் சிகிச்சை முடிந்ததும், பெண்ணை அழகாகக் கழற்றிவிட்டுள்ளார் மருத்துவர். 

பின்னர், அவரது சொந்த மாநிலமான மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த மற்றொரு பெண்ணுடன் மருத்துவருக்கு நிச்சயதார்த்தம் செய்ததாக தகவல் வெளியானதையடுத்து, பெண்ணின் தந்தை அளித்த புகாரின் பேரில் மருத்துவர் மகிளா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

இந்தியத் தண்டனைச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் மருத்துவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது, இதுகுறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.