ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல் முறியடிப்பு!

ஜம்மு-காஷ்மீரில் மாநிலம் ஹந்த்வாரா-பாரமுல்லா நெடுஞ்சாலையில் பாதுகாப்புப் படையினர் சரியான நேரத்தில் வெடிபொருட்களைக் கண்டுபிடித்து பயங்கரவாத தாக்குதலை முறியடித்துள்ளனர். 

News image
கோப்புப்படம்
Updated On :19 அக்டோபர் 2022, 11:18 am

DIN

ஜம்மு-காஷ்மீரில் மாநிலம் ஹந்த்வாரா-பாரமுல்லா நெடுஞ்சாலையில் பாதுகாப்புப் படையினர் சரியான நேரத்தில் வெடிபொருட்களைக் கண்டுபிடித்து பயங்கரவாத தாக்குதலை முறியடித்துள்ளனர். 

லாங்கேட் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சந்தேகத்திற்கிடமான பொருளைக் கண்டதன் அடிப்படையில் காவல்துறை மற்றும் பாதுகாப்புப் படையினர் நடத்திய கூட்டு நடவடிக்கை சோதனையில், 20 கிலோ எடையுள்ள வெடிபொருள்களை செயலிழக்கச் செய்ததாக ராணுவம் தெரிவித்துள்ளது. 

ஹந்த்வாரா-பாரமுல்லா நெடுஞ்சாலையானது போக்குவரத்துக்கும், ராணுவம் மற்றும் சிஏபிஎஃப் கான்வாய்களுக்கும் முக்கியமான சாலையாகும்.

நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து நிறுத்தப்பட்ட நிலையில், அப்பகுதி முழுமையாகச் சுத்தப்படுத்தப்பட்ட பிறகு மீண்டும் தொடங்கியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.