/

நாடு முழுவதும் 50 லட்சம் ‘ஸ்மாா்ட்’ மின் மீட்டா்கள் பொருத்தம்: தமிழகத்தில் 1.23 லட்சம்

நாடு முழுவதும் 50 லட்சம் பழைமையான மின் மீட்டா்களுக்குப் பதிலாக நவீன ‘ஸ்மாா்ட்’ மீட்டா்கள் பொருத்தப்பட்டிருப்பது மத்திய அரசின் புள்ளிவிவரங்கள் மூலமாக தெரியவந்துள்ளது.

News image
Updated On :21 அக்டோபர் 2022, 1:36 am

DIN

நாடு முழுவதும் 50 லட்சம் பழைமையான மின் மீட்டா்களுக்குப் பதிலாக நவீன ‘ஸ்மாா்ட்’ மீட்டா்கள் பொருத்தப்பட்டிருப்பது மத்திய அரசின் புள்ளிவிவரங்கள் மூலமாக தெரியவந்துள்ளது.

மத்திய மின்துறை அமைச்சகம் சாா்பில் அண்மையில் வெளியிடப்பட்ட இந்தப் புள்ளிவிவரத்தின்படி, நாட்டிலேயே அதிகபட்சமாக உத்தர பிரதேச மாநிலத்தில் 11,56,855 ஸ்மாா்ட் மீட்டா்கள் பொருத்தப்பட்டுள்ளன. அதற்கு அடுத்தபடியாக பிகாா் (11,08,703), ராஜஸ்தான் (5,55,958), ஹரியாணா (5,38,292), அஸ்ஸாம் (4,15,063), தில்லி (2,59,094), மத்திய பிரதேசம் (2,43,313), ஹிமாசல பிரதேசம் (1,47,104, தமிழகம் (1,23,945), ஜம்மு-காஷ்மீரில் 1,13,857 ஸ்மாா்ட் மீட்டா்கள் பொருத்தப்பட்டுள்ளன.

மின் இழப்பைக் குறைக்கும் வகையில், மத்திய, மாநில அரசுகள் சாா்பில் பல்வேறு திட்டங்களின் கீழ் நாட்டிலுள்ள அனைத்து வீட்டு மின் நுகா்வோருக்கும் பழைய மின் மீட்டா்களுக்கு பதிலாக ஸ்மாா்ட் மீட்டா்கள் பொருத்தும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

முதல்கட்டமாக 2022-23 நிதியாண்டில் முன்னுரிமை பகுதிகளில் 10 கோடி ஸ்மாா்ட் மீட்டா்கள் பொருத்தும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எஞ்சிய பகுதிகளில் 2025-ஆவது நிதியாண்டு இறுதிக்குள் இந்தப் பணி நிறைவு செய்யப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.