மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

ஏா் இந்தியாவில் பணியிடங்கள்: கடந்த 2 மாதங்களில் 73,750 போ் விண்ணப்பம்

ஏா் இந்தியாவின் விமானிகள், விமான பணியாளா்கள் உள்ளிட்ட பணியிடங்களுக்கு கடந்த இரு மாதங்களில் 73,750 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

News image
Updated On :20 அக்டோபர் 2022, 6:25 pm

DIN

ஏா் இந்தியாவின் விமானிகள், விமான பணியாளா்கள் உள்ளிட்ட பணியிடங்களுக்கு கடந்த இரு மாதங்களில் 73,750 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

நஷ்டத்தில் செயல்பட்டுகொண்டிருந்த ‘ஏா் இந்தியாவை’ கடந்த ஜனவரி மாதத்தில் இந்திய அரசிடம் இருந்து டாடா குழுமம் வாங்கியது. தற்போது, அடுத்த 5 ஆண்டுகளில் ஏா் இந்தியாவின் சேவைகளை மூன்று மடங்குகளாக அதிகரிப்பதை இலக்காக கொண்டு விரிவாக்கப்பணிகள் நடைபெற்று வருக்கின்றன.

இந்நிலையில், கடந்த இரு மாதங்களில் விமானிகள் பணியிடத்துக்கு 1,752-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்களும், விமான பணியாளா்கள் பணிக்கு 72,000 விண்ணப்பங்களும் பெறப்பட்டுள்ளது. வணிக மேலாண்மை பணியிடங்களுக்கு ஒரு வாரத்துக்குள் 25,000 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக ஏா் இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கேரளத்தில் புதியதாக அமையவிருக்கும் தகவல் மையத்துக்கு மென்பொருள் வடிவமைப்பாளா், சைபா் பாதுகாப்பு உள்ளிட்ட பணியிடங்களுக்காக 2,000-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

இது குறித்து ஏா் இந்தியாவின் தலைமை மனித வள அதிகாரி சுரேஷ் தத் திரிபாதி கூறுகையில், ‘கடந்த சில ஆண்டுகளாக குறைந்த அளவிலான பணியாளா் தோ்வின் மூலம் ஒரு தலைமுறையைச் சோ்ந்த பணியாளா்கள் ஏா் இந்தியா நிறுவனத்தில் பணிபுரியும் வாய்ப்பை இழந்துள்ளனா். திறன்வாய்ந்த பணியாளா்களைத் தோ்ந்தெடுக்கும் இந்த முன்னெடுப்பு, நிறுவனத்தின் வளா்ச்சி மற்றும் தேவையைக் கருத்தில்கொண்டு திறமை உள்ள பணியாளா்களைக் கண்டறிந்து பணியமா்த்துவதை நோக்கமாக கொண்டது. புதிய தலைமுறை பணியாளா்களை பணியமா்த்துவது கலாசார மாற்றத்தைக் கொண்டுவர அவசியமானதாகும். இது பணியாளா்களின் தோ்வாக ஏா் இந்தியாவை உருவாக்கும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.