
மேக் மை டிரிப், ஓயோ நிறுவனங்களுக்கு இந்திய போட்டி ஆணையம் ரூ.292 கோடி அபராதம் விதித்துள்ளது.
விதிகளை மீறி சட்டத்துக்கு புறம்பாக செயல்பட்டத்தைத் தொடர்ந்து எழுந்த புகாரில் மேக் மை டிரிப் மற்றும் கோஐபிபோ நிறுவனத்துக்கு ரூ.223.48 கோடியும் ஓயோ நிறுவனத்துக்கு ரூ.168.88 கோடியும் அபராதம் விதித்துள்ளதாக இந்திய போட்டி ஆணையம் தன் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அதாவது, இந்த நிறுவனங்கள் தங்கள் செயலிகள் மூலம் ஆன்லைனில் தங்கும்விடுதிகளை முன்பதிவு செய்வதில் அதிக தள்ளுபடிகளை அறிவிப்பதால் அவற்றை சாராத ஓட்டல் நிறுவனங்கள் இழப்பைச் சந்திப்பதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







