1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

திருப்பதியில் நிர்மலா சீதாராமன் வழிபாடு!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று காலை திருமலை திருப்பதியில் ஏழுமலையானை தரிசனம் செய்தார். 

News image
Updated On :20 அக்டோபர் 2022, 10:25 am

DIN


 
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று காலை திருமலை திருப்பதியில் ஏழுமலையானை தரிசனம் செய்தார். 

மூன்று நாள் பயணமாக குடும்பத்துடன் ஆந்திரத்துக்கு வருகை தந்துள்ள நிர்மலா சீதாராமன், நேற்றிரவு ஸ்ரீ பத்மாவதி தேவி கோயிலுக்குச் சென்றார், பின்னர் 70 கி.மீ தொலைவில் உள்ள சித்தூர் காணிப்பாக்கத்தில் உள்ள ஸ்ரீ வரசித்தி விநாயகரை வழிபாடு செய்தார். 

திருப்பதியில் இரவு தங்கிய மத்திய அமைச்சர் இன்று காலை ஏழுமலையானை வழிபட்டார். அவருக்கு தேவஸ்தான தலைவர் ஒய்.பி.சுப்பாரெட்டி, கூடுதல் செயல் அதிகாரி தர்மா ரெட்டி ஆகியோர் வரவேற்பு அளித்தனர். 

திருப்பதியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா பல்கலை வளாகத்தில் நடைபெறும் வருமான வரித்துறை கருத்தரங்கில் அவர் பங்கேற்றார். 

பின்னர், ஸ்ரீ காளஹஸ்தியில் உள்ள புகழ்பெற்ற பஞ்சபூதத் தலங்களில் ஒன்றான ஸ்ரீவாயுலிங்கேஸ்வர சுவாமியைத் தரிசிக்க நிர்மலா சீதாராமன் செல்லவுள்ளதாக தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.