மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

குறையும் கரோனா! நாட்டில் இன்றைய பாதிப்பு நிலவரம்

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,119 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. மேலும் 5 பேர் கரோனாவுக்குப் பலியாகியுள்ளனர். 

News image
Updated On :21 அக்டோபர் 2022, 5:00 am

DIN

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,119 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. மேலும் 5 பேர் கரோனாவுக்குப் பலியாகியுள்ளனர். 

கரோனா பாதிப்பு விவரங்களை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தினசரி வெளியிட்டு வருகிறது. 

அதன்படி கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் புதிதாக 2,119 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. மேலும் 5 பேர் உயிரிழந்துள்ளதை அடுத்து இறப்பு எண்ணிக்கை 5,28,948 ஆக உயர்ந்துள்ளது. 

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 2,582 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4,40,84,646 ஆக பதிவாகியுள்ளது. சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 25,037 ஆகக் குறைந்துள்ளது. 

நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தின் கீழ் இதுவரை 2,19,50,97,574 டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. நேற்று ஒரேநாளில் மட்டும் 4,63,338 டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.