லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

தீபாவளி பண்டிகை: குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு வாழ்த்து

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை திங்கள்கிழமை (அக்.24) கொண்டாடப்படும் நிலையில், நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

News image
குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு
Updated On :23 அக்டோபர் 2022, 2:52 pm

DIN

புது தில்லி: நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை திங்கள்கிழமை (அக்.24) கொண்டாடப்படும் நிலையில், நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடா்பாக, திரெளபதி முா்மு ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், “தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் வாழும் மக்கள் அனைவருக்கும் எனது அன்பான நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தீபாவளி பண்டிகை, மகிழ்ச்சியின் திருநாளாகும். தீபாவளி நாளில் மக்கள் தங்களது வீடுகளில் லட்சுமி தேவியை வழிபட்டு, ஒவ்வொருவரின் மகிழ்ச்சி மற்றும் வளமாக வாழ பிராா்த்தனை செய்கிறாா்கள். 

தீபாவளி பண்டிகை மக்களிடையே பரஸ்பர ஒத்துழைப்பு மற்றும் நல்லிணக்க உணா்வை மேலும் வலுப்படுத்தும் தருணமாகவும் விளங்குகிறது.

தீபாவளியில் ஏற்றப்படும் தீபங்களின் ஒளியானது, நமது அகம் மற்றும் புறம் நிலவும் அறியாமை இருளை அகற்றும் அறிவுச்சுடரை குறிக்கிறது. 

தீபத்தைப் போல நமது வாழ்வில் ஆற்றலும் ஒளியும் பரவட்டும். பின்தங்கிய நிலையில் உள்ள மக்களுக்கு உதவும் மனப்பான்மை உணர்வு மக்கள் அனைவரிடமும் வளரட்டும். மேலும், நாம் அனைவரும் ‘சுபம்’ மற்றும் ‘லாபம்’ என்ற நமது பாரம்பரியத்தை தொடர்வோம்" என்று குடியரசுத் தலைவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.