திரைப்பட கலை இயக்குநர் சந்தானம் மாரடைப்பால் காலமானார்!

தமிழ் திரையுலகில் முன்னணி கலை இயக்குநர்களின் ஒருவராக வலம் வந்தவர் சந்தானம்.
திரைப்பட கலை இயக்குநர் சந்தானம் மாரடைப்பால் காலமானார்!
Published on
Updated on
1 min read



திரைப்பட கலை இயக்குநர் சந்தானம்(50) மாரடைப்பால் காலமானார். 

தமிழ் திரைப்படங்களின் தரமான படைப்புகளின் ஒன்றாக போசப்படும் படம் செல்வராகவன் இயக்கிய ஆயிரத்தில் ஒருவன். இந்த படத்தின் கலை இயக்குநராக பணியாற்றியவர் சந்தானம். நடிகர் விஜய் சர்கார், ரஜினியின் தர்பார் போன்ற படங்களில் கலை இயக்குநராக பணியாற்றியுள்ளார். 

தமிழ் திரையுலகில் முன்னணி கலை இயக்குநர்களின் ஒருவராக வலம் வந்தவர் சந்தானம்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். 

இவருடைய மரணத்திற்கு திரையுலகை சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

இவர் ஆயிரத்தில் ஒருவன், இறுதிச்சுற்று, சர்கார், தர்பார், தெய்வத்திருமகள் உள்ளிட்ட படங்களில் சந்தானம் கலை இயக்குநராக பணியாற்றியுள்ளார்.

இறுதியாக ஏ.ஆர். முருகதாஸ் தயாரிப்பில் கௌதம் கார்த்தி நடித்துள்ள 1947 என்ற திரைப்படத்திலும் கலை இயக்குநராக பணியாற்றியுள்ளார். இந்த படம் விரைவில் வெளியாக உள்ளது. 

ஆயிரத்தில் ஒருவன் படத்தில் தனது கலை இயக்கத்தின் மூலம் சமகால மற்றும் மன்னர் கால வாழ்வியலை ரசிகர்களின் கண்முன் கொண்டு வந்தவர் என ரசிகர்களால் பேசப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com