புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

நவ.11-ல் விசாகப்பட்டினம் செல்கிறார் பிரதமர் மோடி! 

பல்வேறு வளர்ச்சி மற்றும் உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதற்காக பிரதமர் நரேந்திர மோடி நவம்பர் 11-ம் தேதி விசாகப்பட்டினம் செல்கிறார். 

News image
பிரதமர் மோடி
Updated On :26 அக்டோபர் 2022, 6:49 am

DIN

பல்வேறு வளர்ச்சி மற்றும் உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதற்காக பிரதமர் நரேந்திர மோடி நவம்பர் 11-ம் தேதி விசாகப்பட்டினம் செல்கிறார். 

ரூ.400 கோடி மதிப்பீட்டில் விசாகப்பட்டினம் ரயில் நிலையத்தை நவீனப்படுத்தும் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டுவதற்கு துறைமுக நகருக்கு வருவதாக ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. அன்றைய தினம் அவர் மத்திய அரசின் திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்ட உள்ளார். 

மேலும், ரூ.26,000 கோடி செலவில் ஹெச்பிசிஎல் பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலை விரிவாக்கம் மற்றும் நவீனமயமாக்கல் திட்டம், ஐஐஎம் விசாகப்பட்டினத்தின் நவீன பசுமையான புதிய வளாகத்தின் முதல் கட்டம் மற்றும் விசாகப்பட்டினத்தில் கப்பல் முனையம் ஆகியவற்றையும் அவர் திறந்துவைக்க உள்ளார். 

ஏ.யூ பொறியியல் கல்லூரி மைதானத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் பேச உள்ளார் என வட்டாரங்கள் தெரிவித்தன. 

ஆளுநர் பிஸ்வ பூஷன் ஹரிசந்தன், முதல்வர் ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டி ஆகியோர் பிரதமருடன் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கின்றனர்.

பிரதமரின் வருகைக்கான முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் அ.மல்லிகார்ஜுனா, விசாகப்பட்டினம் மாநகராட்சி (ஜிவிஎம்சி) ஆணையர் ராஜபாபு மற்றும் பிற அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

மாநிலங்களவை உறுப்பினர் ஜிவிஎல் நரசிம்மராவ் சமீபத்தில் பிரதமரை சந்தித்து, பல வளர்ச்சி மற்றும் உள்கட்டமைப்பு திட்டங்களைத் துவக்கி வைப்பதற்கும், அடிக்கல் நாட்டுவதற்கும் விசாகப்பட்டினத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.