அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

பேருந்துக்குள் விளக்கேற்றி தீபாவளி கொண்டாடிய இருவர் பலி

ஜார்க்கண்ட் மாநிலத்தில், தீபாவளி நாளில், பேருந்துக்குள் விளக்குகளை ஏற்றிவிட்டு, அதற்குள் படுத்துறங்கிய ஓட்டுநரும் உதவியாளரும் தீயில் கருகி பலியாகினர்.

News image
Updated On :26 அக்டோபர் 2022, 12:21 pm

DIN


ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில், தீபாவளி நாளில், பேருந்துக்குள் விளக்குகளை ஏற்றிவிட்டு, அதற்குள் படுத்துறங்கிய ஓட்டுநரும் உதவியாளரும் தீயில் கருகி பலியாகினர்.

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சி அருகே, வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்து ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்ததில் அதில் இருந்த இரண்டு பேர் உடல் கருகி பலியானது தொடர்பாக விசாரணை நடைபெற்றது.

விசாரணையில், அவர்கள் பேருந்துக்குள் விளக்குகளையும் மெழுகுவர்த்தியும் ஏற்றி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விளக்குகளும் மெழுகுவர்த்தியும் ஏற்றப்பட்டிருந்ததால் பேருந்துக்குள் தீப்பற்றியதாகவும், இதில் பேருந்துக்குள் உறங்கிக் கொண்டிருந்த மதன் மஹ்தோ (50), இப்ராஹிம் (25) ஆகியோர் உடல் கருகி பலியாகினர்.

இந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 1 மணிக்கு நடந்தது. தீ பயங்கரமாக பற்றி எரிந்ததால் அதற்குள் சிக்கியவர்களை மீட்க முடியாமல் போனதாகக் கூறப்படுகிறது.

அருகில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்தின் ஓட்டுநர்கள், தீப்பற்றிய பேருந்தில் சிக்கியவர்களை மீட்க எவ்வளவோ முயன்றும் முடியவில்லை. பேருந்துக்குள் விளக்குகள் மற்றும் மெழுகுவர்த்திகளை ஏற்றிவிட்டு ஓட்டுநரும் உதவியாளரும் பூஜைகளை செய்துவிட்டு, கதவு, ஜன்னல்களை பூட்டிவிட்டு உறங்கியுள்ளனர்.

இருவரும் மதுபோதையில் இருந்ததால், பேருந்துக்குகள் தீப்பற்றியதும் அவர்களால் உணர முடியாமல் போனதாகவும் கூறப்படுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.