மதுரை விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்து! - மத்திய அமைச்சரவை ஒப்புதல்மருத்துவக் கல்லூரிகளில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீடு அதிகரிப்பு: தமிழக அரசுஎல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

‘பதவியை மட்டும் அனுபவிக்கும் பிரதமர் மோடி’: ராகுல் காந்தி விமர்சனம்

பிரதமர் மோடி காஷ்மீர் பண்டிட்டுகளை பாதுகாக்காமல் பதவியை அனுபவித்து வருவதாக காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல்காந்தி விமர்சனம் தெரிவித்துள்ளார்.

News image
ராகுல் காந்தி
Updated On :27 அக்டோபர் 2022, 3:17 pm

DIN

பிரதமர் மோடி காஷ்மீர் பண்டிட்டுகளை பாதுகாக்காமல் பதவியை அனுபவித்து வருவதாக காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல்காந்தி விமர்சனம் தெரிவித்துள்ளார்.

இந்திய ஒற்றுமை பயணத்தில் ஈடுபட்டுள்ள காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல்காந்தி தெலங்கானாவில் நடைபயணத்தில் ஈடுபட்டுள்ளார். நாட்டின் பல்வேறு பிரச்னைகள் குறித்து மத்திய அரசை விமர்சித்துவரும் ராகுல்காந்தி காஷ்மீர் பண்டிட்டுகள் கொலை செய்யப்படுவதைத் தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம்சாட்டியுள்ளார். 

இதுதொடர்பாக அவர் தனது சுட்டுரைப் பதிவில், “இந்த ஆண்டு மட்டும் காஷ்மீரில் 30 பண்டிட்டுகள் கொல்லப்பட்டுள்ளனர். இதனால் ஏற்படும் பாதுகாப்பின்மை காரணமாக அவர்கள் அங்கிருந்து வெளியேறி வருகின்றனர்” எனத் தெரிவித்துள்ளார். 

மேலும் அவர், “பிரதமர் மோடி ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக அளித்த வாக்குறுதிகளை மறந்து பதவியை அனுபவித்து வருகிறார். காஷ்மீர் பண்டிட்டுகள் சொந்த நாட்டிலேயே அகதிகளாக இருக்கிறார்கள்” என விமர்சித்துள்ளார். 

காஷ்மீர் பண்டிட் பூரன் கிரிஷன் பட் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து எழுந்த அச்சம் காரணமாக காஷ்மீர் பண்டிட்டுகள் தங்களது வீடுகளை விட்டு வெளியேறி ஜம்முவில் தஞ்சமடைந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.