ஜம்மு-காஷ்மீரை பழைய நிலைக்கு மாற்ற வேண்டும்: மெகபூபா முப்தி

 இந்தியாவுடன் ஜம்மு-காஷ்மீரை இணைக்க மகாராஜா ஹரி சிங் கையெழுத்திட்ட ஒப்பந்தம் திரும்ப அமல்படுத்தப்படவில்லை என்றால் ஜம்மு-காஷ்மீரில் இந்தியாவினுடைய இருப்பு என்பது சட்டவிரோதமானது என மெகபூபா தெரிவித்தார்
ஜம்மு-காஷ்மீரை பழைய நிலைக்கு மாற்ற வேண்டும்: மெகபூபா முப்தி

இந்தியாவுடன் ஜம்மு-காஷ்மீரை இணைக்க மகாராஜா ஹரி சிங் கையெழுத்திட்ட ஒப்பந்தம் திரும்ப அமல்படுத்தப்படவில்லை என்றால் ஜம்மு-காஷ்மீரில் இந்தியாவினுடைய இருப்பு என்பது சட்டவிரோதமானது என மெகபூபா முப்தி தெரிவித்தார்.

இது குறித்து மெகபூபா முப்தி கூறியதாவது: ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு கடந்த 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5ல் நீக்கியது. மத்திய அரசின் இந்த முடிவு சட்ட விரோதமானது. ஜம்மு-காஷ்மீர் இந்தியாவுடன் இணைக்கப்படும்போது உள்ள நிபந்தனைகள் மீண்டும் ஜம்மு-காஷ்மீரில் கடைபிடிக்கப்பட வேண்டும். அப்படி செய்யாவிட்டால் ஜம்மு-காஷ்மீரில் இந்தியாவின் இருப்பு என்பது சட்டவிரோதமானது. 1947ஆம் ஆண்டு ஜம்மு-காஷ்மீர் இந்தியாவுடன் இணைக்கப்பட்டபோது உள்ள நிபந்தனைகளை நீக்குவது என்பது சட்டவிரோதமானது. அதனால், ஜம்மு-காஷ்மீரின் பழைய நிலை மீண்டும் கொண்டுவரப்பட வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com