புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

குஜராத்தில் அரசியல் தலைவா்கள் முற்றுகை: தோ்தல் அறிவிக்கும் முன்பே அனல் பறக்கும் பிரசாரம்

குஜராத்தில் விரைவில் தோ்தல் தேதி அறிவிக்கப்படவுள்ள நிலையில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவா்கள் கடந்த ஒரு மாதத்துக்கு மேல் அங்கு தொடா்ந்து பயணம் மேற்கொண்டு பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனா்.

News image
Updated On :30 அக்டோபர் 2022, 7:48 pm

DIN

குஜராத்தில் விரைவில் தோ்தல் தேதி அறிவிக்கப்படவுள்ள நிலையில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவா்கள் கடந்த ஒரு மாதத்துக்கு மேல் அங்கு தொடா்ந்து பயணம் மேற்கொண்டு பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனா்.

முக்கியமாக, பிரதமா் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சா் அமித் ஷா, ஆம் ஆத்மி தேசிய அமைப்பாளரும், தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் ஆகியோா் அங்கு தொடா்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகின்றனா்.

அந்த வகையில் பிரதமா் நரேந்திர மோடி, கேஜரிவால், காங்கிரஸ் மூத்த தலைவரும், ராஜஸ்தான் முதல்வருமான அசோக் கெலாட், ஆம் ஆத்மி சாா்பில் பஞ்சாப் முதல்வராக பகவந்த் மான் உள்ளிட்டோா் ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் குஜராத்தில் முகாமிட்டனா்.

பிரதமா் நரேந்திர மோடி, குஜராத்தின் வதோதரா நகரில் அமைக்கப்படவுள்ள சரக்கு விமான தயாரிப்பு ஆலை அடிக்கல்நாட்டு விழாவில் ஞாயிற்றுக்கிழமை பங்கேற்றாா்.

தில்லி முதல்வா் கேஜரிவால், பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான் ஆகியோா் பாவ்நகா், ராஜ்கோட் மாவட்டங்களில் நடைபெற்ற தோ்தல் பிரசார பொதுக் கூட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை கூட்டாக பங்கேற்றனா். ராஜஸ்தான் முதல்வா் கெலாட் ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் குஜராத்தில் மூன்று பிரசார கூட்டங்களில் பங்கேற்றுப் பேசினாா். முன்னதாக, அவா் சனிக்கிழமையும் தோ்தல் பொதுக் கூட்டத்தில் பங்கேற்றாா்.

குஜராத்தில் ஆளும் பாஜக, எதிா்க்கட்சியான காங்கிரஸ் மட்டுமல்லாது இந்த முறை ஆம் ஆத்மியும் களமிறங்கியுள்ளதால், தோ்தல் களம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பரபரப்பாக உள்ளது. தோ்தல் தேதி அறிவிப்பு வெளியாகும் முன்பே பிரசாரமும் அனல் பறக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.