மதுரை விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்து! - மத்திய அமைச்சரவை ஒப்புதல்மருத்துவக் கல்லூரிகளில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீடு அதிகரிப்பு: தமிழக அரசுஎல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

விண்வெளித் துறையில் அதிசயங்களை நிகழ்த்துகிறது இந்தியா: பிரதமர் மோடி

சோலார் மற்றும் விண்வெளித் துறையில் இந்தியா அதிசயங்களை நிகழ்த்தி வருகிறது. தீபாவளிக்கு முன்பு கூட இந்தியா 36 செயற்கைக்கோள்களை விண்ணில் வெற்றிகரமாக நிலைநிறுத்தியது. 

News image
Updated On :30 அக்டோபர் 2022, 9:12 am

DIN


சோலார் மற்றும் விண்வெளித் துறையில் இந்தியா அதிசயங்களை நிகழ்த்தி வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.  

மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி இன்று (அக்.30) நாட்டு மக்களுடன் உரையாற்றினார். அப்போது வானியல் துறையில் இந்தியாவின் பங்களிப்பு குறித்து பேசிய அவர், 

சோலார் மற்றும் விண்வெளித் துறையில் இந்தியா அதிசயங்களை நிகழ்த்தி வருகிறது. தீபாவளிக்கு முன்பு கூட இந்தியா 36 செயற்கைக்கோள்களை விண்ணில் வெற்றிகரமாக நிலைநிறுத்தியது. 
இந்த வெற்றியின் மூலம் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை, குச் முதல் கோஹிமா வரை உள்ள நாட்டின் அனைத்து பகுதிகளையும் எண்ம (டிஜிட்டல்) வழியில் இணைக்க முடியும்.

இந்தியாவில் கிரையோஜெனிக் ராக்கெட் தொழில்நுட்பத்தின் ஆரம்பகட்டத்தை நினைவு கூர்கிறேன். இந்திய விஞ்ஞானிகள் உள்நாட்டு தொழில்நுட்பத்தை மட்டும் வளர்க்கவில்லை. உள்நாட்டு தொழில்நுட்பத்தின் வளர்ச்சியின் உதவியால் தற்போது அடுத்தடுத்த செயற்கைக்கோள்கள் செலுத்தப்படுகின்றன. 

உலக வர்த்தக சந்தையில் இந்தியா வலுவான இடத்தைப் பிடித்துள்ளது. இதன் மூலம் இந்தியாவுக்கு புதிய வாய்ப்புகள் உருவாகியுள்ளன.

இந்தியா தனது பாரம்பரிய அனுபவத்தை நவீன அறிவியலுடன் இணைத்து பார்க்கிறது. இதன் விளைவாக சோலார் மூலம் மின்சாரம் தயாரிக்கும் நாடுகளில், இந்தியா மிகப்பெரிய நாடாக உருவாகியுள்ளது. எளிய மற்றும் நடுத்தர குடும்பங்களின் கல்விக்கு இது பெரிதும் உதவுகிறது எனக் குறிப்பிட்டார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.