இந்திய விமானப் படை பயன்படுத்தும் சினூக் ஹெலிகாப்டர்கள் நல்ல நிலையில் இருப்பதாகவும் எந்த பிரச்னையும் இல்லை என்றும் தயாரிப்பு நிறுவனமான போயிங்கின் இந்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.
1960களில் இருந்தே அமெரிக்க ராணுவத்தில் பயன்படுத்தப்பட்டு வரும் சினூக் என்ற வகை ஹெலிகாப்டரில் சமீபமாக அடிக்கடி என்ஜின் தீப்பிடித்த புகார் வந்ததையடுத்து அதன் பயன்பாட்டுக்கு தடை விதித்து அமெரிக்கா உத்தரவிட்டது. தற்போது அமெரிக்காவிடம் 400 சினூக் ஹெலிகாப்டர்கள் உள்ளன.
இந்தியாவிலும் கடந்த 2019 மார்ச் மாதம் முதல் சினூக் ஹெலிகாப்டர்கள் ராணுவத்தில் முக்கியப் பயன்பாட்டில் உள்ளன. இந்தியாவிடம் தற்போது 15 சிஎச்-47 சினூக் ஹெலிகாப்டர்கள் உள்ளன
மேலும், சினூக் ஹெலிகாப்டர்களுக்கு அமெரிக்க ராணுவம் தடை விதித்ததையடுத்து அதைத் தயாரித்த போயிங் நிறுவனத்திடம் இந்திய விமானப்படை விளக்கம் கேட்டுள்ளது.
இந்நிலையில் 'ஏஎன்ஐ' செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த போயிங் நிறுவனத்தின் இந்திய தலைமை அதிகாரி சலில் குப்தே, 'இந்தியாவில் பயன்பாட்டில் உள்ள சினூக் ஹெலிகாப்டர்கள் நல்ல நிலையில் உள்ளன. எந்த பிரச்சனையும் இல்லை. மேலும், இந்தியப் படைகளால் இயக்கப்படும் ஹெலிகாப்டரில் இதுவரை எந்தப் பாதிப்பும் இல்லை. அவை செயல்பாட்டில் உள்ளன' என்று தெரிவித்துள்ளார்.
மேலும், இதுகுறித்து அரசு அதிகாரிகள், 'அமெரிக்க ராணுவத்தின் சினூக் சிஎச்-47 ஹெலிகாப்டர்கள் நிறுத்தப்பட்டதற்கான காரணங்களை இந்தியா அமெரிக்காவிடம் கேட்டுள்ளது. இந்திய விமானப்படையின் சினூக் ஹெலிகாப்டர் இன்னும் செயல்பாட்டில் உள்ளது' என்று தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நெல்லையப்பர் கோயில் ஆனித் தேரோட்டம்: பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அமைச்சர் ரமேஷ் ஆய்வு!

பாக்யராஜ் மறைவு.. மகளின் திருமண நாள் படங்களை வெளியிட்ட குஷ்புவுக்கு எதிர்ப்பு!!

ஆமீர் கான் முதல் ஜாக்கி ஷெராஃப் வரை... ஹிந்தியில் ரீமேக் செய்ய ஆசைப்பட்ட பாக்யராஜ் படம்!






