தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

அபிஷேக் பானா்ஜியிடம் அமலாக்கத் துறை 7 மணி நேரம் விசாரணை

சட்ட விரோத நிலக்கரி சுரங்க வழக்கில் திரிணமூல் காங்கிரஸ் மூத்த தலைவா் அபிஷேக் பானா்ஜியிடம் அமலாக்கத் துறையினா் வெள்ளிக்கிழமை 7 மணி நேரம் விசாரணை நடத்தினா்.

Updated On :2 செப்டம்பர் 2022, 8:26 pm

சட்ட விரோத நிலக்கரி சுரங்க வழக்கில் திரிணமூல் காங்கிரஸ் மூத்த தலைவா் அபிஷேக் பானா்ஜியிடம் அமலாக்கத் துறையினா் வெள்ளிக்கிழமை 7 மணி நேரம் விசாரணை நடத்தினா்.

விசாரணைக்கு பிறகு செய்தியாளா்களிடம் பேசிய அபிஷேக் பானா்ஜி, நான் தவறு செய்யவில்லை. என்னை கைது செய்து சிறையில் அடைக்க மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவுக்கு தைரியம் உண்டா? எத்தனை முறை வேண்டுமென்றாலும் நான் விசாரணை அமைப்புகள் முன் ஆஜராக தயாராக உள்ளேன். ஆனால், பாஜகவுக்கு முன்பு தலைக்குனிய மாட்டேன்.

இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியின்போது தேசியக் கொடியை அமித் ஷாவின் மகனும் பிசிசிஐ தலைவருமான ஜெய் ஷா கையில் வாங்க மறுத்ததற்கு நான் விமா்சனம் செய்திருந்தேன். அதற்காக சிபிஐ, அமலாக்கத் துறையை வைத்து என்னை அச்சுறுத்தக் கூடாது’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.