கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

குறையும் கரோனா! நாட்டில் இன்றைய பாதிப்பு நிலவரம்

நாட்டில் ஒரேநாளில் புதிதாக 6,168 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 58 பேர் பலியாகியுள்ளனர். 

News image
Updated On :2 செப்டம்பர் 2022, 4:01 am

DIN

நாட்டில் ஒரேநாளில் புதிதாக 6,168 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 58 பேர் பலியாகியுள்ளனர். 

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில், நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 6,168 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. நேற்று பாதிப்பு 7,946 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. 

கரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவா்களின் எண்ணிக்கை 59,210 ஆக உள்ளது. சிகிச்சை பெறுவோரின் விகிதம் 0.13 சதவீதமாக உள்ளது. 

மேலும், 58  பேர் கரோனாவுக்கு உயிரிழந்ததையடுத்து மொத்த உயிரிழப்பு 5,27,932 ஆக உள்ளது. இறந்தோரின் விகிதம் 1.19 சதவீதமாக உள்ளது.

கரோனாவிலிருந்து மேலும் 9,685 போ் குணமடைந்துள்ளனா். இதுவரை 4,38,55,365 போ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா். குணமடைந்தோர் விகிதம் 98.68 சதவீதமாக உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் இதுவரை 2,12,52,83,259 (212.75 கோடி) தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. நேற்று ஒரேநாளில் மட்டும் 22,40,162 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.