குஜராத் மாநிலம் அம்பாஜியில் சாலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.4 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 நிதியுதவியும் அறிவித்தார்.
இதுகுறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்ட டிவிட்டர் பதிவில்,
குஜராத் மாநிலம் அம்பாஜியில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையப் பிரார்த்திக்கிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்று பதிவிட்டுள்ளார்.
குஜராத்தின் ஆரவல்லி மாவட்டத்தில் சாலையின் ஓரத்தில் நின்ற பக்தர்கள் மீது கார் மோதியதில் 6 பேர் உயிரிழந்தனர். மேலும் 7 பேர் படுகாயமடைந்தனர்.
பாதிக்கப்பட்டவர்கள் பஞ்சமஹால் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட மத பாதயாத்திரையின் ஒரு பகுதியாகும். அவர்கள் பனஸ்கந்தாவில் உள்ள அம்பாஜி கோவிலை நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, கிருஷ்ணாபுரா கிராமம் அருகே இந்த விபத்து ஏற்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

உறுதியாகும் பாஜக தொகுதிகள் ? | Admk | Bjp | Modi in madurai | Thiruparankundram visit | EPS

டிப்பர் லாரி மீது இருசக்கர வாகனம் மோதி வருவாய் ஆய்வாளர் உள்பட இருவர் பலி

ஈரான் - அமெரிக்கா இடையில் மத்தியஸ்தம் செய்யத் தயார்! - இந்தோனேசியா அறிவிப்பு!

மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
வீடியோக்கள்

உறுதியாகும் பாஜக தொகுதிகள் ? | Admk | Bjp | Modi in madurai | Thiruparankundram visit | EPS
தினமணி வீடியோ செய்தி...

Thaai kizhavi movie review | Radikaa | Sivakarthikeyan
தினமணி வீடியோ செய்தி...
OPS வருகையால் திமுகவிற்கு என்ன பலன்? | Ravindran duraisamy interview | DMK | MKStalin | OPS in dmk
தினமணி வீடியோ செய்தி...

பழைய டெம்ப்ளேட்டுக்கு திரும்பிய இந்தியா: இனி சிங்கப் பாதை தான்!
தினமணி வீடியோ செய்தி...

