இந்தியாவில் தற்கொலைகள் அதிகரித்து வருவதற்கு காரணம் என்ன? என்சிஆர்பி அதிர்ச்சி அறிக்கை

இந்தியாவில் இளைஞர்களின் தற்கொலை, குடும்பத் தற்கொலைகள் அதிகரித்து வருகின்றன. தற்கொலைக்கான காரணங்களில் குடும்பப் பிரச்னைகள் மற்றும் உடல்நலப் பிரச்னைகள்தான் பிரதானமாகக் கூறப்படுவதாக என்சிஆர்பி அறிக்கையி
இந்தியாவில் தற்கொலைகள் அதிகரித்து வருவதற்கு காரணம் என்ன? என்சிஆர்பி அதிர்ச்சி அறிக்கை

இந்தியாவில் இளைஞர்களின் தற்கொலை, குடும்பத் தற்கொலைகள் அதிகரித்து வருகின்றன. தற்கொலைக்கான காரணங்களில் குடும்பப் பிரச்னைகள் மற்றும் உடல்நலப் பிரச்னைகள்தான் பிரதானமாகக் கூறப்படுவதாக என்சிஆர்பி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் தற்கொலைகள் மூலம் 2021 ஆம் ஆண்டில் நடந்த உயிரிழப்புகள் குறித்து என்சிஆர்பி அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் தற்கொலைகள் குறித்துக் கூறப்பட்டுள்ளதாவது:

இந்தியாவில் கடந்த 2019-21 ஆம் ஆண்டின் சமீபத்திய அறிக்கையின்படி, 54 ஆண்டுகளில் 17.56 லட்சத்துக்கும் அதிகமான பெண்கள் உள்பட 4.7 கோடி பேர் தற்கொலை செய்துகொள்வதற்கான பல்வேறு வழிகளைப் பயன்படுத்தி தங்கள் வாழ்க்கையை முடித்துக்கொண்டுள்ளனர் என்று தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (என்சிஆர்பி) தெரிவித்துள்ளது.

முறையாக அரை நூற்றாண்டுக்கும் மேலாக தற்கொலை செய்து கொள்வதற்கான மற்ற வழிகளைக் காட்டிலும், ‘தூக்கு’ என்பது ஒருவரின் வாழ்க்கையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான மிகவும் ஏற்றுக்கொள்ளப்பட்ட முறையாக நீடித்து வருகிறது. மேலும், தற்கொலைக்கான காரணங்களில் பிரதானமாகக் கூறப்படுவது குடும்பப் பிரச்னைகள் மற்றும் நோய்களால் ஏற்பட்ட விரக்தியே (உடல்நலம்) தற்கொலைக்கு துண்டியுள்ளது.

தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் 2019-21 இன் சமீபத்திய அறிக்கையின்படி, 54 ஆண்டுகளில் 17.56 லட்சத்துக்கும் அதிகமான பெண்கள் உள்பட 4.7 கோடி பேர் தற்கொலைக்கு பல்வேறு வழிகளில் தங்கள் வாழ்க்கையை முடித்துக்கொண்டுள்ளனர்.

2020 இல், 88,460 பேரும், 2021 இல் 93,580 பேரும் உச்சபட்சமாக மின்விசிறிகள் மற்றும் கூரைகளில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருந்தாலும், மொத்த தற்கொலைகளில் 58 சதவிகிதத்திற்கும் அதிகமானோர், இந்த முறையிலேயே தங்கள் வாழ்க்கையை முடித்துக்கொண்டுள்ளனர்.

தேசிய குற்ற ஆவணக் காப்பகம் அறிக்கையில் இருந்து வெளிப்பட்ட ஒரு திடுக்கிடும் உண்மை என்னவென்றால், இந்தியாவில் 1998 ஆம் ஆண்டு முதல் 43,027 பெண்கள் உள்பட 104,713 பேர் தற்கொலை செய்து கொண்டதில் இருந்து தற்கொலை விகிதம் ஆபத்தான விகிதத்தில் இருந்தது. "தற்கொலைகளின் அதிகரிப்பு விகிதம் 1998 முதல் செங்குத்தாக அதிகரிக்கத் தொடங்கியது" என்று என்சிஆர்பி வட்டாரம் தெரிவித்துள்ளது. "அந்த ஆண்டு முதல், தற்கொலைகளின் எண்ணிக்கை ஆறு இலக்கங்களுக்குச் சென்றது. 2009 இல், முந்தைய ஆண்டுகளில் சில சிறிய மாறுபாடுகளுடன் தற்கொலைகளின் எண்ணிக்கை 110,587 ஆக அதிகரித்தது" என்று அந்த வட்டாரம் தெரிவித்தது.

2020 மற்றும் 2019 இல் முறையே 1,53,052 மற்றும் 1,39,123 ஆக இருந்த நிலையில், 2021 இல் 1,65,033 தற்கொலைகள் என உச்சத்தை எட்டியது. 2017 ஆம் ஆண்டில், மொத்தம் 1,29,887 தற்கொலைகள் பதிவாகியுள்ளன, இது 2018 இல் 1,34,516 ஆக உயர்ந்துள்ளது.

தற்கொலைக்கான மோசமான ஆண்டு 2021: 2014 மற்றும் 2021 க்கு இடையில், 310 திருநங்கைகள் தற்கொலை செய்துகொண்டதாகவும்,  2021 இல் 28 திருநங்கைகள் உயிரிழந்துள்ளனர், அதைத் தொடர்ந்து 2020 ஆம் ஆண்டில் 22 பேர், 2019 இல் 17 பேர் மற்றும் 2018 ஆம் ஆண்டில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். இதில், 340 பேரில், திருமணமானாவர்கள் 197 பேர், திருமணமாகாதவர் 143 பேர். நாடு முழுவதும் 131 பொதுமக்கள் மற்றும் குடும்பத் தற்கொலை வழக்குகள் பதிவாகியுள்ளதை அடுத்து தற்கொலைக்கான மோசமான ஆண்டாக 2021 பார்க்கப்படுகிறது.

2021 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் 33 தற்கொலைகள் மற்றும் குடும்பத் தற்கொலைகள் பதிவாகியுள்ளன, அதைத் தொடர்ந்து ராஜஸ்தானில் 25, ஆந்திரத்தில் 22, கேரளத்தில் 12 மற்றும் கர்நாடகத்தில் 10 வழக்குகள் பதிவாகியுள்ளன. தமிழகத்தில் 33 வழக்குகளில் 80 தற்கொலைகள் நடந்துள்ளன என்று தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (என்சிஆர்பி) தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com