நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

‘காங்கிரஸ், கம்யூனிஸ்ட்டுகள் ஏழைகளுக்காக உழைப்பதில்லை’: அமித்ஷா

காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஏழைகள் நலனுக்காக செயல்படுவதில்லை என திருவனந்தபுரத்தில் பாஜக மூத்த தலைவர் அமித்ஷா குற்றம்சாட்டினார்.

News image
Updated On :3 செப்டம்பர் 2022, 4:10 pm

DIN

காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஏழைகள் நலனுக்காக செயல்படுவதில்லை என திருவனந்தபுரத்தில் பாஜக மூத்த தலைவர் அமித்ஷா குற்றம்சாட்டினார்.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் 30ஆவது தென்மண்டல கவுன்சில் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. 

இதனைத் தொடர்ந்து பாஜக எஸ்சி அணி கருத்தரங்கில் அமித்ஷா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், “காங்கிரஸ் கட்சி நாட்டில் அழிந்து வருகிறது. கம்யூனிஸ்ட் கட்சிகளை உலகம் அழித்து வருகிறது. கேரளத்திற்கு எதிர்காலம் உள்ளதென்றால் அது பாஜகவால்தான்” எனக் குறிப்பிட்டார். 

தொடர்ந்து பேசிய அவர், “காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் பழங்குடியினர் மற்றும் ஏழைகளுக்காக பணியாற்றுவதில்லை. அவர்களை வெறும் வாக்குகளாக மட்டுமே பார்க்கின்றனர் எனத் தெரிவித்தார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.