/

இருசக்கர வாகனங்கள் மீது மோதிய அரசுப் பேருந்து: 4 பேர் பலி

ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து ஒன்று, இரு சக்கர வாகனங்கள் மீது மோதியதில், ஒரு குழந்தை உள்பட நான்கு பேர் பலியாகினர். 3 பேர் படுகாயமடைந்தனர்.

News image
இருசக்கர வாகனங்கள் மீது மோதிய பேருந்து: 4 பேர் பலி
Updated On :1 பிப்ரவரி 2024, 10:16 am

DIN


ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து ஒன்று, இரு சக்கர வாகனங்கள் மீது மோதியதில், ஒரு குழந்தை உள்பட நான்கு பேர் பலியாகினர். 3 பேர் படுகாயமடைந்தனர்.

செவ்வாய்க்கிழமை இரவு ராஜஸ்தான் மாநில அரசுப் போக்குவரத்துக் கழகத்துக்குச் சொந்தமான பேருந்து, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் சென்று கொண்டிருந்த இரு சக்கர வாகனங்கள் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியது.

விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் உடல் கூறாய்வுக்குப் பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. படுகாயமடைந்தவர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பேருந்து ஓட்டுநர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.