வெறுப்பு அரசியலால் என் தந்தையை இழந்தேன், ஆனால் என் நாட்டை இழக்க மாட்டேன் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
இந்திய ஒற்றுமையை வலியுறுத்தி, காங்கிரஸ் சார்பில் நடைபெறும் ‘இந்தியாவை ஒருங்கிணைப்போம்’ யாத்திரை ராகுல் காந்தி தலைமையில் கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீா் வரையில் இன்று தொடங்கவுள்ளது.
இந்த நிகழ்விற்காக தமிழகம் வந்துள்ள ராகுல் காந்தி இன்று காலை ஸ்ரீபெரும்புதூரில் உள்ள அவரது தந்தையும் முன்னாள் பிரதமருமான ராஜிவ் காந்தி நினைவிடத்தில் முதல்முறையாக அஞ்சலி செலுத்தினார்.
அந்த புகைப்படத்தை டிவிட்டரில் பகிர்ந்த ராகுல் காந்தி, “வெறுப்பு மற்றும் பிரிவினைவாத அரசியலால் என் தந்தையை இழந்தேன், ஆனால் என் நாட்டை இழக்க மாட்டேன். வெறுப்புணர்வை அன்பு வெல்லும், பயத்தை நம்பிக்கை வீழ்த்தும். ஒன்றிணைந்தால் நாம் மீள்வோம்.” என்று பதிவிட்டுள்ளார்.
இதையும் படிக்க | கன்னியாகுமரி முதல் காஷ்மீா் வரை இன்றுமுதல் ராகுல் ஒற்றுமை நடைப்பயணம்
இன்று மாலை காங்கிரஸ் கட்சியின் பாதயாத்திரையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். தொடர்ந்து, ராகுல் காந்தி பங்கேற்கும் பொதுக்கூட்டம் கன்னியாகுமரியில் நடைபெறுகிறது.
இன்றுமுதல் 150 நாள்கள் சுமார் 3600 கி.மீ. ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் நடைப்பயணம் மேற்கொள்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

சக்தி மசாலா இயக்குநா் சாந்தி துரைசாமிக்கு வாழ்நாள் சாதனையாளா் விருது

பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு: விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் 43,417 மாணவா்கள் எழுதினா்

காவல் துறையை எளிதில் அணுகும் வகையில் ‘கோவை டிஜி காப்’ சேவை அறிமுகம்

ஐடி ஊழியரிடம் நூதன முறையில் ரூ.43 ஆயிரம் பறிப்பு
வீடியோக்கள்

சட்டென்று மாறுது வானிலை பாடல்!
தினமணி வீடியோ செய்தி...

"உங்க கனவு நிறைவேறியாச்சு! இனி மக்கள் கனவை நினைவாக்குங்கள்!": MK Stalin Speech | DMK
தினமணி வீடியோ செய்தி...

மன அழுத்தமா? காரணங்கள் என்ன? மன நலனுக்கு என்ன செய்ய வேண்டும்?
தினமணி வீடியோ செய்தி...

Podcast | திருச்சியில் மாநாடுகள்: யாருக்குத் திருப்பம்? | Dinamani | News and Views | Epi - 12
தினமணி வீடியோ செய்தி...

