கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

ஒடிசாவில் மீண்டும் கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

வங்கக்கடலில் உருவாகியுள்ள புயல்காற்று, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற உள்ளதால், ஒடிசாவில் மீண்டும் கனமழை பெய்து வருகிறது.

News image
Updated On :7 செப்டம்பர் 2022, 12:08 pm

DIN

புவனேஸ்வர்: வங்கக்கடலில் உருவாகியுள்ள புயல்காற்று, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற உள்ளதால், ஒடிசாவில் மீண்டும் கனமழை பெய்து வருகிறது.

சமீபத்தில் பெய்த கனமழையால் வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் ஒடிசா மாநிலத்தில், அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு-மத்திய வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் என வானிலை ஆய்வு மையம் இன்று (புதன்கிழமை) தெரிவித்துள்ளது.

இதையடுத்து நாளை (வியாழக்கிழமை) இரவுக்குள் ஆழ்கடலில் இருந்து மீனவர்கள் கரைக்கு திரும்ப அறிவுறுத்தப்பட்டுள்ளதாக புவனேஸ்வர் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் தெற்கு ஒடிசா மற்றும் வடக்கு ஆந்திரப் பிரதேச கடற்கரையிலிருந்து 45 முதல் 55 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் கடல் சீற்றமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மல்கங்கிரி, கோராபுட், கஜபதி, கஞ்சம், ராயகடா, காந்தமால், நபரங்பூர், கலஹண்டி, நாயகர், குர்தா மற்றும் பூரி ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அடுத்த வரும் மூன்று நாட்களில் ஒடிசாவின் பல மாவட்டங்களில் 70 முதல் 200 மில்லி மீட்டா் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யும் என்று கணித்துள்ளது வானிலை ஆய்வு மையம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.