கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

காசநோயை முற்றிலுமாக ஒழிக்க அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்: குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு

காசநோயை முற்றிலுமாக ஒழிக்க அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார். 

News image
Updated On :9 செப்டம்பர் 2022, 4:27 pm

DIN

காசநோயை முற்றிலுமாக ஒழிக்க அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார்.

பிரதமரின் ‘காசநோய் இல்லாத இந்தியா’ திட்டத்தை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று காணொலிக் காட்சி மூலம் தொடங்கிவைத்தார். தொடர்ந்து நிகழ்வில் பேசிய அவர்,  “பிரதமரின் ‘காசநோய் இல்லாத இந்தியா’ திட்டத்திற்கு இந்திய குடிமக்கள் அனைவரும் அதிக அளவில் முன்னுரிமை அளித்து பேரியக்கமாக மாற்ற வேண்டும். நம் நாட்டில் காசநோய் மூலமே அதிக இறப்பு எண்ணிக்கை உள்ளது. 

உலக மக்கள் தொகையில் இந்தியாவின் பங்கு 20 சதவீதம்.  ஆனால் உலக அளவில் காசநோய்க்கு 25 சதவீதத்திற்கும் அதிகமானோர் இந்தியாவில் பாதிக்கப்பட்டுள்ளனர். பிரதமரின் ‘காசநோய் இல்லாத இந்தியா’ திட்டத்தின் கீழ், வரும்  2025 ஆம் ஆண்டிற்குள் இந்தியாவில் இருந்து காசநோயை முற்றிலுமாக அகற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நீடித்த வளர்ச்சியின் கீழ் 2030 ஆம் ஆண்டிற்குள் அனைத்து நாடுகளும் காசநோயை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபை இலக்கு நிர்ணயித்தது.

ஆனால் மத்திய அரசின் சிறந்த செயல்பாடுகளினால் வரும் 2025 ஆண்டிற்குள் காசநோய் முற்றிலுமாக அகற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. காசநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது கட்டாயமாகும். இந்நோய் தாக்கத்திற்கு முன்பாகவே காப்பதும் சாத்தியம் என்பதை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். காசநோய்க்கான மருத்துவம் சிறப்பான முறையிலும், எளிதில் அணுகக்கூடிய வகையிலும் உள்ளது.

எனவே காசநோயை முற்றிலுமாக ஒழிப்பதற்கான முயற்சியில் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.