புது தில்லி: நாட்டில் ஒரேநாளில் புதிதாக 5,554 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 18 பேர் பலியாகியுள்ளனர்.
இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில், நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 5,554 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் தொற்று பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 4,44,90,283 ஆக உள்ளது.
அதே நேரத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவா்களின் எண்ணிக்கை 48,850 ஆக குறைந்துள்ளது. சிகிச்சை பெறுவோரின் விகிதம் 0.11 சதவீதமாக உள்ளது.
இதையும் படிக்க | தமிழகத்தில் புதிய மின் கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்தது!
மேலும், 18 பேர் கரோனாவுக்கு உயிரிழந்ததையடுத்து மொத்த உயிரிழப்பு 5,28,139 ஆக உள்ளது. இறந்தோரின் விகிதம் 1.19 சதவீதமாக உள்ளது.
கரோனாவிலிருந்து மேலும் 6,322 போ் குணமடைந்துள்ளனா். இதுவரை 4,39,13,294 போ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா். குணமடைந்தோர் விகிதம் 98.70 சதவீதமாக உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் இதுவரை 2,11,77,55,021(216 கோடி) தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. நேற்று ஒரேநாளில் மட்டும் 21,63,811 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

உதகை பைகாரா ஏரியில் பெட்ரோல், டீசல் படகுகள் இயக்க உயா்நீதிமன்றம் தடை

100 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.729.88 கோடி நிலுவை - மத்திய அரசு

பேரவை தோ்தல்: காங்கிரஸில் பல்வேறு குழுக்கள் அமைப்பு

இராக்கில் அமெரிக்க ராணுவ டேங்கா் விமான விபத்து: 6 போ் உயிரிழப்பு
வீடியோக்கள்

Podcast | புதிய கட்சி.. புதிய ஆதரவு.. புதிய உடன்பாடு.. சட்டம் ஒழுங்கு! | News and Views | Epi - 13 |
தினமணி வீடியோ செய்தி...

Prof. K.M. Kader Mohideen Interview | இ.யூ.முஸ்லிம் லீக்கிற்கு 2 இடங்கள் போதுமா ? | IUML | DMK Alliance
தினமணி வீடியோ செய்தி...

Dinamani வார ராசிபலன்! | March 15 முதல் 21 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
தினமணி வீடியோ செய்தி...

Valaipechu Anthanan Interview | விஜய்யிடம் இப்போது மனமாற்றம்.. | TVK Vijay | Vijay Trisha issue
தினமணி வீடியோ செய்தி...

