தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

சீர்திருத்த இல்லத்தைவிட்டு வெளியேறிய 6 சிறுமிகள்: இருவர் திரும்பினர்

மும்பை கோவண்டியில் உள்ள ஒரு சீர்திருத்த இல்லத்திலிருந்து ஆறு மைனர் சிறுமிகள் தப்பி ஓடிய நிலையில், அவர்களில் இருவர் சில மணி நேரம் கழித்து வீடு திரும்பியுள்ளதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்

News image

கோப்புப் படம்

Updated On :12 செப்டம்பர் 2022, 1:27 pm

DIN

மும்பை: மும்பையில் உள்ள சீர்திருத்த இல்லத்திலிருந்து ஆறு சிறுமிகள் தப்பியச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இரு சிறுமிகள் மீண்டும் இல்லத்திற்கே திரும்பியுள்ளனர்.

இதுகுறித்து காவல்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

“கோவண்டி சியோன்-டிரோம்பே சாலையில் அமைந்துள்ள சீர்திருத்த இல்லத்திலிருந்து 15-17 வயதுக்குட்பட்ட சிறுமிகள், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை ஜன்னல் கம்பிகளை உடைத்து தப்பியுள்ளனர்.

அவர்களில் இரண்டு சிறுமிகள் நேற்று இரவே சீர்திருத்த இல்லத்துக்கு மீண்டும் திரும்பியுள்ளனர். மற்றவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

மேலும், சிறுமிகள் தப்பிச் செல்ல உதவியதாக இதுவரை யாரும் கண்டறியப்படாததால், அடையாளம் தெரியாத நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.” என்று தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.