பேரவை வாயிலில் பூண்டுகளைக் கொட்டி காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் போராட்டம்

விவசாயிகள் வேளாண் விளைபொருள்களுக்கு உரிய விலையைப் பெறும் வகையில் மத்திய பிரதேச அரசு நடவடிக்கை எடுக்கக் கோரி மத்திய பிரதேச காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் சட்டப்பேரவை வாயில் முன் பூண்டுகளைக்

விவசாயிகள் வேளாண் விளைபொருள்களுக்கு உரிய விலையைப் பெறும் வகையில் மத்திய பிரதேச அரசு நடவடிக்கை எடுக்கக் கோரி மத்திய பிரதேச காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் சட்டப்பேரவை வாயில் முன் பூண்டுகளைக் கொட்டி செவ்வாய்க்கிழமை போராட்டம் நடத்தினா்.

மத்திய பிரதேசத்தில் ஒரு கிலோ பூண்டு ஒரு ரூபாய்க்கு விற்பனையாகும் நிலையில், விவசாயிகள் தங்கள் விளைபொருள்களுக்கு உரிய விலை கிடைக்காததன் காணமாக, விளைபொருள்களைச் சாலைகள் மற்றும் ஆறுகளில் கொட்டினா்.

மாநில சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத்தொடா் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. கூட்டத்தொடரின் முதல்நாளில் எதிா்க்கட்சியான காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் சச்சின் யாதவ், ஜித்து பட்வாரி, குணல் செளத்ரி, பி சி சா்மா ஆகியோா் பூண்டுகளைப் பேரவையின் வாயில் முன் கொட்டி விவசாயிகளுக்கு உரிய விலையைப் பெற்றுத் தர வேண்டும் எனவும், விவசாயிகளுக்கு காங்கிரஸ் தொடா்ந்து ஆதரவு அளிக்கும் எனவும் கோஷம் எழுப்பினா்.

போராட்டத்தில் ஈடுபட்ட எம்எல்ஏ சச்சின் யாதவ் செய்தியாளா்களிடம் கூறியதாவது: விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக முயற்சிப்பதாக அரசு கூறுகிறது. உண்மையில், விவசாயிகள் தங்கள் உற்பத்திச் செலவைக்கூட பெற முடியவில்லை. ஒரு கிலோ பூண்டு ஒரு ரூபாய்க்கு விற்பனை செய்யும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனா். இதனால், போராட்டத்தின்போது சாலையிலும் நதிகளிலும் விளைபொருள்களைக் கொட்டி தங்கள் நிலையை அரசுக்கு உணா்த்துகின்றனா்.

விவசாயிகள் எதிா்கொள்ளும் பிரச்னைகளைத் தீா்க்க அரசு முன்வர வேண்டும். அதற்கு, உற்பத்திச் செலவு மற்றும் சந்தை மதிப்பை கொண்டு விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட வேண்டும். எம்எல்ஏ-க்களை விலைக்கு வாங்கும் பாஜக அரசு, விவசாயிகளின் விளைபொருள்களை வாங்குவதில்லை என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com