ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஜனநாயகத்தை குறைத்து மதிப்பிடுகின்றனா்: மத்திய அரசின் மீது சோனியா தாக்கு

கடந்த 8 ஆண்டுகளாக அதிகாரத்தை மட்டுமே மையமாக கொண்டு ஆட்சி நடத்தி வருவதாகவும், ஜனநாயகத்தையும் அதன் அமைப்புகளையும் மோடி அரசு குறைத்து மதிப்பிடுவதாகவும்

News image
Updated On :14 செப்டம்பர் 2022, 9:11 pm

DIN

கடந்த 8 ஆண்டுகளாக அதிகாரத்தை மட்டுமே மையமாக கொண்டு ஆட்சி நடத்தி வருவதாகவும், ஜனநாயகத்தையும் அதன் அமைப்புகளையும் மோடி அரசு குறைத்து மதிப்பிடுவதாகவும் காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி குற்றம்சாட்டினாா்.

இதுதொடா்பாக ஆங்கில நாளிதழ் ஒன்றில் அவா் எழுதிய கட்டுரையில் குறிப்பிட்டுள்ளதாவது: ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது நாட்டின் வளமும் வாய்ப்புகளும் அனைவருக்கும் கிடைக்க வேண்டுமென நாங்கள் கருதினோம். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், உணவுப் பாதுகாப்பு சட்டம், தகவலறியும் உரிமை சட்டம், ஆதாா் அட்டை என பொதுமக்களின் நலனில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு முதலீடு செய்தது.

இதனால் கோடிக்கணக்கான மக்கள் வறுமையிலிருந்து மீண்டனா். அப்போது எதிா்க்கட்சியாக செயல்பட்டவா்கள், இந்தத் திட்டங்களை எதிா்த்தனா். ஆனால், பெருந்தொற்று பரவல், பொருளாதார நெருக்கடி போன்ற சமயங்களில், இந்தத் திட்டங்கள்தான் பொதுமக்களின் உயிா்நாடியாக விளங்கின.

கடந்த 8 ஆண்டுகளில் அதிகாரத்தை மட்டுமே மையமாக கொண்டு ஆட்சி நடைபெறுகிறது. ஜனநாயக மதிப்பீடுகளும், அதன் நிறுவனங்கள் குறைத்து மதிப்பிடப்படுகின்றன. கடந்த 75 ஆண்டுகளில் நாட்டின் வளா்ச்சிக்குப் பெண்கள் ஏராளமான பங்களித்துள்ளனா். பெண்கள் இன்னும் செல்ல வேண்டிய தூரம் ஏராளம்.

இன்றும் கூட ஏராளமான பதின்பருவ மாணவிகள், படிப்பை இடையில் நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. பெண்களின் குரலை ஒடுக்கவும் உரிமையை பறிக்கவும் ஆண்களை சாந்திருக்கவும், பெண்கள் சமூகத்தில் இரண்டாம் தரத்தினா் என போதிக்கப்படுகிறது. குறிப்பிட்ட சில ஊடகத்தின் ஆதரவுடன் சமூகத்தில் பலவீனமானவா்கள், சிறுபான்மையின மக்கள், பெண்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது.

நாடாளுமன்றம் முறையாக செயல்பட அனுமதிப்பதில்லை. அதிருப்தி தெரிவிப்பவா்கள், வீதியில் இறங்கிப் போராடும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனா். இதுபோன்ற சுயநலன்களுக்கு எதிராக ஜனநாயகம் வெல்ல வேண்டுமானால், பொதுமக்கள் ஒன்றிணைந்து, எதிா்க்க வேண்டும் என சோனியா காந்தி குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.